அந்தப் படத்துக்கு பிறகு என் மார்க்கெட் வேற லெவல்ல இருக்கு.. ரஜினி பட நடிகை செம ஹேப்பி!

சென்னை: காலா படத்தில் நடித்த பிறகு தனக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக நடிகை ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

சிம்பு Sister Anjali Rao Blessed with Baby Boy | Ramesh Tilak

ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஈஸ்வரி ராவ். தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ஈஸ்வரி ராவ். தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியில் அதிகளவிலான படங்களில் நடித்துள்ளார்.

திருநெல்வேலி ஸ்லாங்

திருநெல்வேலி ஸ்லாங்

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதில் செல்வி என்ற கதாப்பாத்திரத்தில் திருநெல்வேலி ஸ்லாங்கில் பிச்சு உதறியிருப்பார். இந்நிலையில் ஈஸ்வரி ராவ் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார்.

அந்தப் படத்திற்கு பிறகுதான்

அந்தப் படத்திற்கு பிறகுதான்

அதில் நடிகர் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். அந்தப் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் சூடுபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் மற்ற மொழிகளில் இருந்தும் தனக்கு வாய்ப்புகள் வரிசை கட்டியிருப்பதாக கூறியுள்ளார்.

ரஜினிக்கு வாழ்த்து

ரஜினிக்கு வாழ்த்து

காலா படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் நடிகர் ரஜினிகாந்துக்கும் நடிகை ஈஸ்வரி ராவ் நன்றி கூறியுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 45 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் நடிகை ஈஸ்வரி ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபிரண்ட்லி

ஃபிரண்ட்லி

கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து வரும் நடிகை ஈஸ்வரி ராவ், நடிகர் யாஷ் ஒரு ஃபிரண்ட்லி பர்சன் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். நடிகை ஈஸ்வரி ராவ், ஆல வைகுந்தபுரமுலு என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதனை தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X