மண்ட பத்திரம்.. காஸ்ட்லி, ஹார்லி டேவிட்சன் பைக்கில் பிரபல ஹீரோயின் ஜாலி ரெய்டு..வைரலாகும் வீடியோ!
சென்னை: காஸ்ட்லியான ஹார்லி டேவிட்சன் பைக்கில் பிரபல ஹீரோயின் ஜாலி ரெய்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில், ஒய் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், தெலுங்கு நடிகை இஷா ரெப்பா.
இதில் கீதன் பிரிட்டோ, பாப்ரி கோஷ், நாகி நீடு, சங்கிலி முருகன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இளையராஜா இசை
பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் படத்துக்கு பிறகு, எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்தார். இதில் சாக்ஷி அகர்வால், நிகிஷா படேல் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

லாக்டவுன்
இந்தப் படத்தை அடுத்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்களது த்ரோபேக் போட்டோ மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சிலர் தங்களது ஸ்கூல் போட்டோக்களை கூட பதிவிடுகின்றனர்.

ஹார்லி-டேவிட்சன்
இந்நிலையில், நடிகை இஷா ரெப்பா, காஸ்ட்லியான ஹார்லி-டேவிட்சன் பைக்கை ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் அவர் இந்த பைக்கை சிறிது தூரம் ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோ வைராகி உள்ளது. இதற்கு பல ரசிகர்கள், அதெல்லாம் சரி, ஹெல்மெட் எங்கே? என்று கேட்டுள்ளனர். சிலர் மண்ட பத்திரம் என்று கூறியுள்ளனர்.

ஆக்ஷன் படம்
நடிகை இஷா ரெப்பா, ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக, அரவிந்த சமேத வீர ராகவா என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த் வீடியோ எடுக்கப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிறப்பாக இந்த பைக்கை ஓட்டிச் செல்வதாகக் கூறியுள்ள சிலர், அடுத்து ஆக்ஷன் படத்துக்கு டிரை பண்ணுங்க என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











