என்னை 2 இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்தனர்.. அதற்காக சைகை செய்தார்கள்.. பிரபல நடிகை பரபர புகார்!
சென்னை: தன்னை இரண்டு இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறி அதிர வைத்துள்ளார்.
இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார்கள் கூறுவது தொடர்ந்து வருகிறது. மீடூ முலம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட போதும் பாலியல் குற்றச்சாட்டுகள் இன்னும் தொடர்ந்துதான் வருகிறது.
ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீ தத்தா என ஏராளமான நடிகைகள் இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை கூறி அதிர வைத்தனர். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவரும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பாரிஸ் பாரிஸ் படம்
சுவீடன் நாட்டை சேர்ந்தவர் நடிகை எல்லி அவ்ராம். இவர் பாலிவுட்டில் போஸ்டர் பாய்ஸ், நாம் சபானா, பாஸார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

சினிமாவுக்கு வந்த புதிதில்
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை எல்லி அவ்ராம், தனக்கு நடந்து பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். அதாவது, திரைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு 2 இயக்குநர்களை சந்தித்துள்ளார் எல்லி அவ்ராம்.

உள்ளங்கையில் சைகை
அப்போது அந்த இயக்குநர்கள் அவரின் கையை பிடித்து விடாமல் குலுக்கிக்கொண்டே இருந்தனராம். மேலும் அவர்களின் ஒரு விரலால் எல்லியின் உள்ளங்கையை சுரண்டியபடியே இருந்தனராம்.

படுக்கைக்கு அழைப்பு
ஆனால் அதனை புரியாத எல்லி தனது நண்பர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு ஷாக்கான அவர்கள், உன்னை படுக்கைக்கு அழைத்து சைகை செய்துள்ளனர் என்று எடுத்துக்கூறியுள்ளனர்.

பெயரை கூற மறுப்பு
இதனைக் கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் எல்லி. ஆனால் கடைசி வரை அந்த இரண்டு இயக்குநர்கள் யார் என்று தெரிவிக்க மறுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











