பிக் பாஸ் மீதே மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை.. பிக் பாஸ் 3ல் போட்டியாளர் ஆகிறார்?
நடிகை மாதவி லதா பிக் பாஸ் 3ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்: பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை மாதவி லதா, பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்தியில் 13வது சீசன் தொடங்க உள்ள நிலையில், தமிழிலும், தெலுங்கிலும் 3வது சீசன் ஆரம்பிக்க இருக்கின்றன. தமிழில் வரும் 23ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களைத் தொகுத்து வழங்கிய கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் சீசன் 3 விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளை பிக் பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை மாதவி லதா:
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகையும், அரசியல்வாதியுமான மாதவி லதா கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 2வில் மாதவி கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டது.

யூ டூ பிக் பாஸ்?
ஆனால், அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிக் பாஸ் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக மீ டூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் மாதவி. இந்த விவகாரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

தேர்தலில் போட்டி:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலம் குண்டூர் மேற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக மாதவி போட்டியிட்டார். ஆனால் அங்கு அவரால் வெற்றி பெற இயலவில்லை. இதனால் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

போட்டியாளர்கள் விபரம்:
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகிறது என்றாலே இது போல் பலரது பெயர் இணையத்தில் உலா வருவது வாடிக்கை தான். போட்டி துவங்கும் நாளன்று தான், அதிகாரப்பூர்வமாக போட்டியாளர்கள் விபரம் தெரிய வரும். அதுவரை இப்படியாக பல சர்ச்சை பிரபலங்களின் பெயர்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் என இணையத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











