சூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாம பார்பேன்.. கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேச்சு!

சென்னை: தமிழ் நாட்டை சேர்ந்த பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் மகள் தான் ஈஷா தியோல்.

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து படத்தில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் தனியார் நிறுவன திறப்பு விழாவிற்கு வருகை தந்த ஈஷா தியோல் நிறைய விஷயங்களை பேட்டியளித்துள்ளார்.

நல்ல அனுபவம்

நல்ல அனுபவம்

இந்த நிகழ்ச்சியில் ஈஷா தியோல் கூறியதாவது, பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல எனக்கும் உடல் எடை அதிகரிக்கவே செய்தது. நண்பர்களின் பரிந்துரையின் பேரில் இந்த சிகிச்சையின் மூலம் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆய்த எழுத்து திரைப்படம்

ஆய்த எழுத்து திரைப்படம்

மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஈஷா தியோல், சென்னை எப்போதுமே என் சொந்த ஊர். ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'ஆய்த எழுத்து' படத்தில் நடித்துள்ளேன். அதுபோன்று நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என பேசியுள்ளார்.

சூர்யா ரசிகை

சூர்யா ரசிகை

தொடர்ந்து பேசிய ஈஷா தியோல், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை. அதேசமயம் நல்ல படங்கள் என நண்பர்கள் மூலமாக தெரிய வரும்போது, அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன். நான் சூர்யாவின் தீவிர ரசிகை என கூறியுள்ளார்.

நடிப்பதற்கு தடையில்லை

நடிப்பதற்கு தடையில்லை

திருமணம் ஆகி விட்டாலே, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது, திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஓடிடி தளங்கள் வேறு உருவாகி விட்டன. நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கு தடை இல்லை" என பேசியுள்ளார் ஈஷா தியோல்.

கண்டிப்பாக நடிப்பேன்

கண்டிப்பாக நடிப்பேன்

ஹேமமாலினி அவர்களின் சுயசரிதையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு "என்னுடைய அம்மாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும். என் அம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் வெளியாகி இருக்கிறது. படித்தேன், அது நன்றாக இருக்கிறது. அதேபோல யார் அதை படமாக எடுக்கப் போகிறார்கள், எப்படி எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்து தான், அதில் நடிக்க முடியுமா என தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக எனது அம்மாவின் அனுமதி இருந்தால் மட்டுமே அதில் நடிப்பேன்" என பதிலளித்துள்ளார் இஷா தியோல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X