குட்டி நயன்லாம் ஓரம்போ.. தொடை தெரிய ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் பட்டைய கிளப்பும் 'பாபநாசம்' பாப்பா!

திருவனந்தபுரம்: பாபநாசம் படத்தில் குட்டிப் பெண்ணாக நடித்த எஸ்தர் அனில் குமரியாகி ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் இன்டர்நெட்டை திணறடித்து வருகிறது.

2010ஆம் ஆண்டு வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில்.

தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் எஸ்தர். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அனு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

அந்த படம் தெலுங்கில் திருஷ்யம் என்ற பெயரிலும் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் லீடிங் ரோலில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்களே தவிர, குழந்தை நட்சத்திரமான எஸ்தர் மூன்று மொழிகளிலும் தனது கதாப்பாத்திரத்தை தொடர்ந்தார்.

விருதுகள்

விருதுகள்

போலீசார் விசாரணையின் போது பயந்து போய் அவர் நடித்திருக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது நடிப்புக்காக அவார்டுகளையும் பெற்றார் எஸ்தர். தொடர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ரவுடி, ஊலு, ஜாக் அன்ட் ஜில் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

குமரியான குட்டி பாப்பா

குமரியான குட்டி பாப்பா

இதேபோல் ஜோஹர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் எஸ்தர் அனில். மேலும் டாப் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் எஸ்தர். குட்டியாக சுட்டிப் பெண்ணாக இருந்த எஸ்தர் தற்போது வளர்ந்து குமரி பெண்ணாகிவிட்டார்.

கலக்கல் போட்டோ ஷுட்

கலக்கல் போட்டோ ஷுட்

இதனால் ஹீரோயின் சான்ஸை எதிர்பார்த்து அதற்கு தயாராகி வருகிறார். இதற்காக விதவிதமான உடையில் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் எஸ்தர். சேலை, கவுன், பேண்ட், டி ஷர்ட், மாடர்ன் டிரெஸ், பாவாடை தாவணி என பல உடைகளில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தியுள்ளார்.

தொடை முழுவதும்

தொடை முழுவதும்

அதில் ஒரு பக்கம் மட்டுமே ஸ்ட்ராப் உள்ள ட்ரான்ஸ்ப்ரண்ட் பிங்க் கலர் கவுனை அணிந்துள்ளார் நடிகை எஸ்தர். இதில் அவரது தொடை முழுவதும் அப்படியே தெரிந்துள்ளது. அதற்குள்ளேயே கிளாமர் உடையில் கிறங்க வைத்துள்ளார்.

ஓரம் போக வேண்டியதுதான்

ஓரம் போக வேண்டியதுதான்

எஸ்தரின் இந்த க்யூட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என புகழ்ந்துள்ளனர். குட்டி நயன்தாராவெல்லாம் ஓரம் போக வேண்டியதுதான் என்றும் நடிகை அனிகாவையும் சீண்டியுள்ளனர். இதேபோல் கேரள பாரம்பரிய சேலை மற்றும் கறுப்பு நிற சேலையில் வாவ் போட வைத்துள்ளார் எஸ்தர்.

வேற லெவல் வைரல்

வேற லெவல் வைரல்

எஸ்தரின் போட்டோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது. க்யூட், பியூட்டி என வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அவரது இந்த போட்டோக்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. ஒரு சில போட்டோக்களில் முன்னணி நடிகைகள் எல்லாம் ஓரங்கட்டும் வகையில் கொள்ளை அழகில் உள்ளார் இந்த பாபநாசம் பட பாப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X