இந்த வயசுலேயே இப்டியா.. பாபநாசம் குட்டி பாப்பாவின் போட்டோவை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பாபநாசம் படத்தில் குட்டிப் பாப்பாவாக நடித்த எஸ்தர் அனிலின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுலேயே இப்படியா என கேட்டு விளாசி வருகின்றனர்.
2010ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில்.
தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் எஸ்தர். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அனு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

குழந்தை நட்சத்திரம்
அந்த படம் தெலுங்கில் திருஷ்யம் என்ற பெயரிலும் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் லீடிங் ரோலில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்களே தவிர, குழந்தை நட்சத்திரமான எஸ்தர் மூன்று மொழிகளிலும் தனது கதாப்பாத்திரத்தை தொடர்ந்தார்.

விருதுகள்
அவரது நடிப்புக்காக அவார்டுகளையும் பெற்றார் எஸ்தர். தொடர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ரவுடி, ஊலு, ஜாக் அன்ட் ஜில் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

குமரியான குட்டி பாப்பா
இதேபோல் ஜோஹர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் எஸ்தர் அனில். மேலும் டாப் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் எஸ்தர்.

குமரி பெண்ணான எஸ்தர்
மலையாளம், தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்து வருகிறார் எஸ்தர் அனில். குட்டிப் பெண்ணாக இருந்த எஸ்தர் தற்போது வளர்ந்து குமரி பெண்ணாகிவிட்டார்.

ஹீரோயினுக்காக போட்டோ ஷூட்
இதனால் ஹீரோயின் சான்ஸை எதிர்பார்த்து அதற்கு தயாராகி வருகிறார். இதற்காக விதவிதமான உடையில் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் எஸ்தர். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார்.

தெறிக்கவிடும் போட்டோஸ்
சேலை, கவுன், பேண்ட், டி ஷர்ட், மாடர்ன் டிரெஸ், பாவாடை தாவணி என பல உடைகளில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

விதவிமாக போஸ்
ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் எஸ்தர். இதேபோல் கறுப்பு பேண்ட் வெள்ளை நிற க்ராப் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்தும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

செம கிளாமர்
டாப் ஆங்கிள், பாட்டம் ஆங்கிள் என செம கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் எஸ்தர். இதேபோல், பிங்க் நிற பூப்போட்ட டாப்ஸை அணிந்துள்ளார். லோ நெக்காக உள்ள அந்த டாப்ஸில் செம கிளாமர் காட்டியுள்ளார் எஸ்தர்.

பிளாக் பியூட்டி
மேலும் அந்த போட்டோவுக்கு இம்முறையும் என்னுடைய ஃபிரண்ட்ஸ் கேப்ஷன் கொடுக்க எனக்கு உதவி செய்யவில்லை. ஆகையால் என்னுடைய ஃபேவரைட் பிளாக் பியூட்டி கவிதையில் இருந்து சில வரிகளை எழுதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

என்னை கல்யாணம் பண்ணிக்குங்க..
மேலும் பிளாக் பியூட்டி எழுத்தாளரான லானா டெல் ரேவின் பெயரை குறிப்பிட்டு ப்ளீஸ் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார் இந்த 19 வயது க்யூட் பாப்பா.

விளாசல்
எஸ்தர் அனிலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஜொள்ளு விட்டுள்ளனர். அதேநேரத்தில் சிலர் இந்த வயசுலேயே இப்படியா என்று விளாசி உள்ளனர். எஸ்தர் அனிலின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











