twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘தேவதாசிகள்’ பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சொர்ணமால்யா

    |

    Actress faces feminist flak for Devadasi comment
    சென்னை: கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ஒன்றில் தேவதாசிகள் குறித்து பேசிய நடிகை சொர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சென்னை தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை இரு தினங்களுக்கு முன்னர் கருத்தரங்கம் ஒன்று நடத்தியது. முதலில் "தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்" (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு, பின்னர் பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக "பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்" (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது.

    கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா, 'கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர்' என கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், 'தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் லாபம் கருதியே தேவதாசி முறையை ஒழித்தனர் என்றும் விமர்சித்துள்ளார்.

    அத்தோடு, காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி 'தேவதாசி முறை ஒழிப்பு'க்கு எதிராக வாதித்த கருத்துகளையும் தனது பேச்சில் நினைவு கூர்ந்துள்ளார் ஸ்வர்ணமால்யா. தேவதாசி முறை மூலம் பெண்களின் கண்ணியம் குறித்து தவறாக பேசியதாக அவர் மீது பெண்ணியவாதிகள் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

    English summary
    Actress Sornamalya, in her speech to the Evolution of Bharatha Nattiyam conference, had expressed her views on the Devadasi life
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X