வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம்.. இளையராஜாவின் போட்டோவை பகிர்ந்து ஃபரினா நெகிழ்ச்சி!
சென்னை: தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக வலம் வந்தவர் தான் பரீனா ஆசாத். இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்தார். ஆனால், பரீனாவை நடிகையாக மக்கள் மனதில் கொண்டு சேர்த்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் தான். அந்த சீரியலில், வெண்பா என்ற கதாபாத்திரத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் பரீனா. எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அண்மையில் நடைபெற்ற "ராஜா ராப்சடி 2.0" பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் போது இளையராஜாவுடன் ஒரே மேடையில் இருந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ராஜா ராப்சோடி 2.0: இசைஞானி இளையராஜாவின் ராஜா ராப்சோடி 2.0 (Raaja Rhapsody 2.0) என்கிற பிரம்மாண்ட இசை பிப்ரவரி 14ந் தேதி மலேசியாவில் உள்ள கெந்திங் ஹைலேண்ட்ஸில் நடைபெற்றது. பிங்க் ஆசியா மற்றும் மெர்க்குரி நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், 50 பேர் கொண்ட இசைக்குழுவினருடன் இளையராஜா நேரலையில் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியில் பாடக்கூடிய பாடல்களை பிங்க் ஆசியா நிறுவனம் ஆன்லையில் வாக்கெடுப்பு நடத்தி வரிசைப்படுத்தியது. இது கெந்திங் ஹைலேண்ட்ஸில் நடைபெற்ற முதல் தமிழ் இசை கச்சேரியாகும்.

வாழ்க்கையில் முக்கியமான தருணம்: உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியை தொகுப்பாளினி ஃபரீனா தொகுத்து வழங்கிய நிலையில், இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து, என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணங்களில் ஒன்று.. இசைஞானி இளையராஜா அவர்களுடன் அதே மேடையில் நிற்கும் வாய்ப்பு என பதிவிட்டுள்ளார். அந்த படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications