57 வயதில் முட்டி வரை கவுன்.. ஃபாத்திமா பாபுவின் புது அவதாரம்.. க்யூட் என ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகையும் செய்தி வாசிப்பாளருமான ஃபாத்திமா பாபு முட்டி வரை உள்ள கவுனில் வலம் வந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பாளர், சினிமா நடிகை, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் ஃபாத்திமா பாபு. தூர்தர்ஷனின் தமிழ் வெர்ஷனான பொதிகையில் பல ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
1996ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான கல்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ஃபாத்திமா.

ஃபேப்ஸ் தியேட்டர்
தொடர்ந்து பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார் ஃபாத்திமா. சினிமா, சின்னத்திரை என பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ஃபாத்திமா பாபு. ஃபேப்ஸ் தியேட்டர் என்ற நாடக குழு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

முதல் ஆளாக எவிக்டட்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற போதும் முதல் நபராக வெளியேற்றப்பட்டார் ஃபாத்திமா பாபு.

மருத்துவமனையில் சிகிச்சை
தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஃபாத்திமா, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் மோகன் வைத்யாவுடன் இணைந்து நடனமாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ வெளியானது.

மாடர்ன் லுக்
இந்நிலையில் தற்போது நடிகை ஃபாத்திமா பாபுவின் புதிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முட்டி வரை உள்ள கவுனில் ஃபிரி ஹேர் விட்டு வேற லெவலில் போஸ் கொடுத்துள்ளார்.

மோகன் வைத்யா
அந்த உடையில் பல்வேறு செல்பிக்களை எடுத்து குவித்துள்ளார் ஃபாத்திமா. மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் கோரியோகிராஃபரான அமீர் மாஸ்டருடன் போட்டோ எடுத்துள்ளார். இதேபோல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது பார்ட்னரான மோகன் வைத்யாவுடனும் போட்டோ எடுத்துள்ளார் ஃபாத்திமா பாபு.

குவியும் லைக்ஸ்
ஃபாத்திமா பாபுவின் இந்த மாடர்ன் அவதார போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் க்யூட் என ஜொள்ளு விட்டு வருகின்றனர். இந்த போட்டோக்கள் வைரலாகி வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











