தமிழ் சினிமாவின் டாப் 8 நடிகைகள்.. வாவ்.. சொல்ல வைக்கும் குழந்தை பருவ போட்டோக்கள்!

லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் ஓய்வில் உள்ள நடிகைகள் தங்களின் வித்தியாசமான போட்டோக்களையும் பழைய போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அது தொடர்பான நினைவுகளையும் ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்து வருகின்றனர். அப்படி ஷேர் செய்யும் போட்டோக்கள் வைரலாவது வழக்கம் அந்த வகையில் நடிகைகள் ஸ்ருதி ஹாசன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், டாப்ஸி உள்ளிட்ட 8 நடிகைகளின் குழந்தை பருவ போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் அடிக்கடி தனது குழந்தை பருவ போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். குழந்தை பருவத்திலும் அவ்வளவு க்யூட்டாக இருந்துள்ளார் ஸ்ருதி. அவர் ஷேர் செய்திருக்கும் குழந்தை பருவ போட்டோவில் குட்டி கவுனில் எதையோ பார்த்தப்படி உட்கார்ந்திருக்கிறார் ஸ்ருதி. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி

அடுத்து நடிகை டாப்ஸி, தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள டாப்ஸி, தொடர்ந்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தான் குழந்தையாக இருந்தபோது தனது பிறந்த நாள் பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போன்றுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ், தனது அம்மா அப்பா மற்றும் சகோதரியுடன் குழந்தையாக இருந்த போது எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் கையில் பலூனுடன் ஹிப்பி ஹேர் ஸ்டைலில் செம க்யூட்டாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாயிஷா

நடிகை சாயிஷா

நடிகை சாயிஷா, குழந்தையாக இருக்கும் போது தனது தாயுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் குட்டிப் பெண்ணாக நெற்றியில் பொட்டுடன் போஸ் கொடுத்துள்ளார். நடிகை சாயிஷா, கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி தனது டான்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் சாயிஷா.

நடிகை பார்வதி

நடிகை பார்வதி

அடுத்து நடிகை பார்வதி, குட்டி கவுன் கண்களில் மை என க்யூட்டாக உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு தான் குழந்தையாக இருக்கும் போது கேமராவை பார்த்து ரொம்பவே பயப்படுவேன். இந்த போட்டோ எடுக்கும் போது பயத்தால் அழுது கொண்டே இருந்தேன், சாக்லேட் தருவதாக கூறியதால் சிரித்தேன், பல தோல்விகளுக்குப் பிறகு இந்த போட்டோ எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். பார்வதி, பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் அவரது ஆரம்ப படங்களில் இருந்ததை போலவே கொழுக்மொழுக் என உள்ளார். தனது குழந்தை பருவ போட்டோவில் ரசிகர்கள் வாயை பிளக்கும் அளவுக்கு செம க்யூட்டாக உள்ளார் ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா மோத்வானி அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா, கைக்குழந்தையாக அவரது அம்மாவின் கைகளில் தவழும் போட்டோ வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் உறவில் உள்ளார். அன்னையர் தினத்தின் போது தனது மாமியாருக்கு வாழ்த்து சொல்வதற்காக இந்த போட்டோவை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி

சாய் பல்லவி

அடுத்து நடிகை சாய் பல்லவி, இவர் குழந்தையாக இருந்தபோது சேலைக் கட்டிருந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் செம க்யூட்டாக உள்ளார் சாய் பல்லவி. தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலில் செம ஆட்டம் போட்டு பலரையும் மிரள விட்டிருப்பார். அந்த பாடல் இணையத்தில் பல மில்லியன் வியூஸ்களை குவித்து ஏராளமான சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X