மாடியில நிக்கிற மானுகுட்டி ... விஜய் டிவி கேப்ரில்லாவை வர்ணித்த ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவியில் தோன்றியதன் மூலம் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் கேப்ரில்லா தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு வர்ணனைகளில் இறங்கியுள்ளனர்.

நடனப் போட்டிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து நம் அனைவரையும் கவர்ந்து வந்த கேப்ரில்லா தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மொட்டைமாடி புகைப்படம், பல்வேறு ரசிகர்களையும் ரசிக்க வைத்ததோடு அவர்களை ஏடாகூடமாக வர்ணிக்கவும் வைத்துள்ளது.

நடிப்பு வாழ்க்கையை தொடங்கி

நடிப்பு வாழ்க்கையை தொடங்கி

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமான 3 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய கேப்ரில்லா தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

அசத்தலான நடிப்பின் மூலமும்

அசத்தலான நடிப்பின் மூலமும்

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்று அனைவரின் இதயங்களையும் தனது கொஞ்சும் பேச்சின் மூலமும் அசத்தலான நடிப்பின் மூலமும் கவர்ந்து வந்த கேப்ரில்லா தற்பொழுது வளர்ந்துவரும் நடிகையாக ரசிக்க வைக்கும் நடிப்பின் மூலம் பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

குழந்தைகளின் கல்வி

குழந்தைகளின் கல்வி

3 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சமுத்திரக்கனி எழுதி இயக்கியிருந்த அப்பா திரைப்படத்தின் மூலம் பல்வேறு மக்களுக்கு கேப்ரில்லா மிகவும் பரிச்சயமானார். குழந்தைகளின் கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என மிகத்தெளிவாக கூறியிருந்த அப்பா திரைப்படம் ஜனங்களை மிக வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

குட்டிப் பொண்ணு கதாபாத்திரங்களில்

குட்டிப் பொண்ணு கதாபாத்திரங்களில்

வெறும் 20 வயது மட்டுமே பூர்த்தியான கேப்ரில்லா தற்போது வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நிலையில் அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் குட்டிப் பொண்ணு கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் கவர்ந்து வந்ததை தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டி பல்வேறு ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மாடியில நிக்கிற மானுகுட்டி

மாடியில நிக்கிற மானுகுட்டி

இந்நிலையில் தற்போது வீட்டின் மொட்டை மாடியில் மாலை வெயிலை ரசித்தவாறு மாடர்ன் உடையில் அழகு கொஞ்சும் கழுத்தை காட்டியவாறு புகைப்படத்தை பதிந்திருந்த கேப்ரில்லாவை பலரும் வர்ணித்து வரும் நிலையில், ஒருவர் "மாடியில நிக்கிற மானுகுட்டி" எனவும். மற்றொருவர் தமிழ்நாட்டின் "மியா கலிஃபா" எனவும் வர்ணித்து வரும் வேளையில், டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் சமத்துப் பொண்ணாக நடித்திருந்த கேப்ரில்லாவை ஒரு சில ரசிகர்கள் இந்த மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடாதீர்கள் ப்ளீஸ் என கெஞ்சி கேட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X