Don't Miss!
- Sports
ஹர்திக் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.. இளம் வீரர்கள் செய்யும் மெகா தவறு.. கவுதம் கம்பீர் பேட்டி
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாக்க..பாக்க..பல்ஸ் எகிறுதே..புலியின் வாலை பிடித்த கேப்ரில்லா..இதுல சொல்லுங்க மாமா குட்டி பாட்டுவேற!
சென்னை : நடிகை கேப்ரில்லா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 3 திரைப்படத்தில், ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா. அந்த படத்தில் வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் நச்சுனு நடித்து இருப்பார்.
3 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சமுத்திரக்கனி எழுதி இயக்கியிருந்த அப்பா திரைப்படத்தின் மூலம் பல்வேறு மக்களுக்கு கேப்ரில்லா மிகவும் பரிச்சயமானார்.
கன்னக்
குழி
மட்டுமல்ல..
வயிற்றழகைக்
காட்டி..
ரசிகர்களைக்
கிறங்கடித்த
கேப்ரில்லா!

நடிகை கேப்ரில்லா
கேப்ரில்லா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியா என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி கேப்ரில்லாவின் நடிப்புக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலில் காவியா பார்த்திபன் ரொமான்ஸ் அட்டகாசமாக இருக்கும்.

இணையத்தில் படு ஆக்டிவ்
கேப்ரில்லா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் ஈரமான ரோஜாவே காவ்யா மேக்கப், நியூ கார் வாங்கிய வீடியோ, ஆஜித்துடன் இணைந்து பல ரீல் வீடியோக்களை அப்லோட் செய்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார். கேபிரில்லாவும், ஆஜித்தும் அடிக்கடி சந்திக்கும் போட்டோவையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தாய்லாந்தில் ஜாலி ட்ரிப்
தற்போது தாய்லாந்திற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ள, கேப்ரில்லா, புலியை தடவிக்கொடுத்தும், புலிவாலை பிடித்தபடி இருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவிற்கு பின்னணியில் லவ் டுடே படத்தில் வரும் சொல்லுங்க மாமாக்குட்டி என்ற வசனத்தைப் போட்டு வீடியோவாக எடிட் செய்துள்ளார்.

உங்க மாமாக்குட்டியா?
மேலும்,இதற்கு கேப்ஷனாக, குதிக்கும் போது வராத பயம் புலி வாலை பிடிக்கும் போது வருது.. த்ரில்லிங் மொமன்ட் இன் தாய்லாந்த் என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான் என்றும், அவங்க தான் உங்க மாமாக்குட்டியா என்றும் கேட்டு வருகின்றனர்.

சர்ச்சையில் சிக்குவாரா
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சந்தானம் புலியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'இதற்கு பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த விலங்குகள் நல அமைப்புகள் வனவிலங்குகளை சந்தானம் துன்புறுத்துகிறார் என்று பெரும் சர்ச்சையில் சிக்கினார். தற்போது கேப்ரில்லாவும் அதே செய்துள்ளதால், இவரும் சர்ச்சையில் சிக்க வாய்ப்பு உள்ளது.