கொரோனா இருப்பது தெரிந்தும்.. படப்பிடிப்புக்கு சென்ற நடிகை.. பாய்ந்தது வழக்கு!

மும்பை: கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது தெரிந்தும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல மாடல் அழகி கவுஹர் கான். இந்தி தொலைக்காட்சி சேனல்களில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் கவுஹர் கான்.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இதில் வின்னரானார் கவுஹர் கான். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மும்பையில் வசித்து வரும் கவுஹர் கானுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கண்டுகொள்ளாத கவுஹர்

கண்டுகொள்ளாத கவுஹர்

இதனை தொடர்ந்து அவரை குவாரண்டைனில் இருக்குமாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத கவுஹர் கான், படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

உறுதியளித்த கவுஹர்

உறுதியளித்த கவுஹர்

இதனை அறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள மும்பை மாநகராட்சி கமிஷ்னர் விஷ்வாஸ் மோத், கடந்த 11ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, தான் வீட்டைவிட்டு வெளியே போக மாட்டேன் என உறுதியளித்தார்.

மற்றவர்களுக்கும் ஆபத்து

மற்றவர்களுக்கும் ஆபத்து

ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகும் என்று எங்களுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பார்த்தனர்.

பொறுப்பற்ற செயல்

பொறுப்பற்ற செயல்

அப்போது கவுஹர் கான் வீட்டில் இல்லை. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் அவரை குவாரண்டைன் கேம்பிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மும்பை மாநகராட்சி கமிஷ்னர் விஷ்வாஸ் மோத் கூறியுள்ளார். நடிகை கவுஹர் கானின் இந்த பொறுப்பற்ற செயல் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

More from Filmibeat

Read more about: gauhar khan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X