twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஷ்டத்தில் இருக்கும் கௌதமி… 6 வங்கி கணக்குகள் திடீர் முடக்கம் !

    |

    சென்னை : நடிகை கௌதமி மூலதன ஆதாய வரியில் 25 சதவீதத்தை செலுத்தும் பட்சத்தில், அவரது ஆறு வங்கி கணக்குகளின் முடக்கத்தை நீக்கும்படி வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழில் கடந்த 1988ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை கௌதமி. முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த கௌதமி, ரஜினி, கமல்ஹாசன் , விஜய்காந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார்.

    நளினிக்காக சூட்டிங் லொகேஷனை மாற்றிய சுந்தர் சி... நெகிழ்ந்த நடிகை! நளினிக்காக சூட்டிங் லொகேஷனை மாற்றிய சுந்தர் சி... நெகிழ்ந்த நடிகை!

    நடிகை கௌதமி

    நடிகை கௌதமி

    நடிகை கௌதமி பிரபலமாக இருக்கும் போதே சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான அடுத்த ஆண்டே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

    கமலை பிரிந்தார்

    கமலை பிரிந்தார்

    இதையடுத்து, கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் சமீபத்தில் பிரிந்தனர். தனது மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கரை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கௌதமி கூறினார். தற்போது, தனது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கிறார்.

    கௌதமி மனு

    கௌதமி மனு

    இந்நிலையில், நடிகை கௌதமி தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை 2016ஆம் ஆண்டு 4 கோடியே 10 லட்ச ரூபாய் விற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த செப்டம்பரில், டில்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11 கோடியே 17 லட்சம் என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டுள்ளதால் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

    மூலதன ஆதாய வரி

    மூலதன ஆதாய வரி

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டாபாணி பிறப்பித்துள்ள உத்தரவில், மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கௌதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 4 வாரத்திற்குள் மீதி கட்டணத்தை கட்டவேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

    English summary
    Actress gautamis 6 bank accounts frozen, நடிகை கௌதமியின் வங்கி கணக்கு முடக்கம்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X