நடிகை கௌதமி சொத்து மோசடி வழக்கு.. அழகப்பனுக்கு விழுந்த அடுத்த அடி.. களமிறங்கிய அமலாக்கத்துறை!

சென்னை: கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக அரசியலிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பிய நடிகை கௌதமியின் ₹25 கோடி சொத்து மோசடி வழக்கில், தற்போது அமலாக்கத் துறை அதிரடியாகக் களம் இறங்கி உள்ளது. அழகப்பனுக்கு சொந்தமான சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறது.

நடிகை கௌதமி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கௌதமி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2004 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தநேரத்தில் தன்னை ஏமாற்றி, போலியான ஆவணங்கள் மூலம் சொத்துக்களைப் பறித்துக் கொண்டதாகப் அழகப்பன் மீது நடி ககௌதமி புகார் அளித்திருந்தார். ஆனால், அழகப்பனுக்குப் பாஜகவின் சில மூத்த நிர்வாகிகள் ஆதரவாக இருந்ததால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தாமதமானது. இதனால் வேதனையடைந்த கௌதமி, 25 வருடங்கள் உழைத்த எனக்குக் கட்சி துணையாக இல்லை, ஏமாற்றியவனுக்கே ஆதரவு தருகிறது என்று கூறி 2023 அக்டோபரில் பாஜகவில் இருந்து அதிரடியாக விலகினார்.

Actress Gautami ED raid ED
Photo Credit:

அமலாக்கத்துறை சோதனை: நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில், அழகப்பன், நாச்சியாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த மோசடியில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை உறுதி செய்த அமலாக்கத் துறையினர், சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதலே அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் முடிவுக்கு பின்பே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி தெரியவரும். இந்தச் சோதனை கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X