அய்யோ.. கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்த ஏமாத்திட்டாங்களே.. கதறும் கௌதமி!

சென்னை: கஷ்டப்பட்டு சம்பாதித்த 25 கோடி ரூபாய் சொத்தை கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் ஏமாற்றிவிட்டதாக நடிகை கௌதமி சென்னை பெருநகர காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முதலில் நடிகையாக அறிமுகமான நடிகை கௌதமி. ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

Actress Gauthami has lodged a complaint with the Chennai Police Commissioners office against Alagappan

நடிகை கௌதமி: அந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார். 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நடிகை கௌதமி சமீப காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஏமாற்றுவிட்டார்: இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகை கௌதமி, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் ஏமாற்றிவிட்டார் என்றும், நான் 17 வயதில் இருந்து, இதுவரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். இதனால் சினிமாவிலிருந்து நான் சிறிய இடைவெளி அதனால் கொண்டேன்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்: அப்போது நான் சம்பாதித்த பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது அந்த இடத்தினுடைய மதிப்பு 25 கோடி. என்னுடைய குடும்பத் தேவைக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்தேன். இதனால் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவரிடம் தொடர்பு கொண்டு என்னுடைய நிலத்தை விட்டு தருமாறு கேட்டேன்.

Actress Gauthami has lodged a complaint with the Chennai Police Commissioners office against Alagappan

போலி கையெழுத்து: என்னுடைய நிலத்தை விற்று தருவதற்கான பவர் ஏஜெண்ட் உரிமையை அழகப்பனுக்கு கொடுத்தேன். அந்த நேரத்தில் அவர் என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை 4 கோடி ரூபாய்க்கு அழகப்பன் விற்பனை செய்து, தனக்கு வெறும் 62 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தார். நான் எனது கையெழுத்தை மோசடியாக போட்டு அழகப்பனும் அவருடைய குடும்பத்தினரும் என்னுடைய 8 ஏக்கர் நிலத்தை அபகரித்து மோசடி செய்திருக்கின்றனர்.

Actress Gauthami has lodged a complaint with the Chennai Police Commissioners office against Alagappan

கொலை மிரட்டல்: இது குறித்து கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனக்கு சொந்தமான 25 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு அழகப்பன் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌதமி அந்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். கௌதமி அளித்துள்ள இந்த புகார் சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X