For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன? அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி!

  |

  சென்னை: இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இளம் நடிகை யாருமே வரலையே என்கிற கவலை லக்‌ஷ்மி மேனன் நோ சொன்னதற்கு பிறகு எழுந்தது. ஆனால், உடனடியாக பிரபல நடிகை ஒருவரை பிக்பாஸ் குழு களமிறக்கி இருப்பதாக மாஸ் அப்டேட் கிடைத்திருக்கிறது.

  Bigg Boss Tamil Season 4 Promo | 4th October 2020 | Kamal Hassan

  ப்பா.. என ரசிகர்களை வாய் பிளக்க வைக்கப் போகிறார் அந்த நடிகை என்பது மட்டும் நிச்சயம்.

  வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  ரெண்டு டிவி

  ரெண்டு டிவி

  கொரோனா கலவரத்தால் ஐபிஎல் மற்றும் பிக்பாஸ் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் நிலை உருவாகி இருக்கிறது. ஐபிஎல் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்கள் வீட்டில் இரண்டு டிவிக்களை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி பார்க்கப் போகிறார்கள் என ஏகப்பட்ட மீம்களும் தெறிக்கின்றன.

  பெண் போட்டியாளர்கள்

  பெண் போட்டியாளர்கள்

  நடிகை கிரண், ரேகா, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பெண் பிரபலங்கள் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்க உள்ளதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளன. மேலும், அனைவரும் ஹோட்டல் ஒன்றில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

  பாய்ஸ் டீம்

  பாய்ஸ் டீம்

  அப்படியே இந்த பக்கம் பாய்ஸ் டீமை பார்த்தால், நடிகர் சுரேஷ், அனுமோகன், ரியோ ராஜ், நடிகர் ஆரி, ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் அஜித், பாடகர் வேல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அக்டோபர் 4ம் தேதி நிகழ்ச்சி தொடங்கும் என கூறியதை போலவே நிகழ்ச்சியின் தேதியை விஜய் டிவி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

  மறுத்த இளம் நடிகைகள்

  மறுத்த இளம் நடிகைகள்

  ஒரு கோடி கேட்டு பேரம் பேசியதால், நடிகை ஷில்பா மஞ்சுநாத்தை பிக்பாஸ் குழு கழட்டி விட்டதாக தகவல் வெளியானது. பின்னர், பிகில் படத்தின் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதா அய்யர் வருகிறார் என்ற தகவல் ரசிகர்களை ஆர்வம் கொள்ள செய்தது அவரும் கடைசியில் மறுத்து விட்டார்.

  கேவலப்படுத்திய லக்‌ஷ்மி மேனன்

  கேவலப்படுத்திய லக்‌ஷ்மி மேனன்

  அம்ரிதா அய்யர் மறுத்த நிலையில், அடுத்ததாக நடிகை லக்‌ஷ்மி மேனனின் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றது. அதனை மறுத்த லக்‌ஷ்மி மேனன், நான் யார் வீட்டு டாய்லெட்டையும் கழுவ மாட்டேன். உங்க வதந்தியை நிறுத்திக்கோங்க என பிக்பாஸ் நிகழ்ச்சியை கேவலப்படுத்தி பதிவு போட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

  விஜய்சேதுபதி ஜோடி

  விஜய்சேதுபதி ஜோடி

  லக்‌ஷ்மி மேனன் வரவில்லை என்றால் என்ன, மற்றொரு சூப்பரான இளம் நடிகையை சர்ப்ரைஸாக இறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டு இருப்பது தற்போது கசிந்துள்ளது. விஜய்சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ப்பா என விஜய்சேதுபதியையே சொல்ல வைத்த நடிகை காயத்ரி தான் அந்த ரகசிய போட்டியாளர்.

  சூப்பரான நடிகை

  சூப்பரான நடிகை

  18 வயசு எனும் படத்தில் அறிமுகமாகி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. பொன்மாலை பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாமனிதன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்திய காயத்ரி இந்த சீசனில் கலந்து கொண்டால் சரியான போட்டியாகத் தான் இருக்கும்.

  English summary
  After Lakshmi Menon says no to Bigg Boss publicly. Now Bigg Boss Tamil season 4 pull young actress Gayathri as the contestant.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X