For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அட போங்கப்பா.. அந்த இளம் ஹீரோயினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கலையாம்.. ட்வீட் போட்டுட்டாங்க!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு நாள் தான் இருக்கு என கடைசி புரமோவையும் கமல் பேசிவிட்டு சென்று விட்டார்.

  ஆனால், தற்போது அதிரடியாக ரூமர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என அந்த இளம் ஹீரோயின் போட்ட ட்வீட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  லக்‌ஷ்மி மேனனுக்கு பதிலாக இவராவது வருவார் என எதிர்பார்த்த நிலையில், இவரும் கடைசி நேரத்தில் டாட்டா காட்டி உள்ளார்.

  விஜய் டிவி பிரபலங்களே

  விஜய் டிவி பிரபலங்களே

  மற்ற சீசன்களை விட இந்த முறை முற்றிலும் விஜய் டிவி பிரபலங்களை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப் போகின்றனர் என்கிற பயங்கர குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்பார்க்கப்படும் ஏகப்பட்ட போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் என்பது பிக்பாஸ் ரசிகர்களையே ரொம்ப அப்செட் ஆக்கி உள்ளது.

  ஒரே வழி

  ஒரே வழி

  பிக்பாஸ் தமிழ் சீசன் 4ஐ வெற்றிகரமானதாக மாற்ற ஒரே வழி போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்க்கும் செம டஃப் ஆகவும், புதுசாகவும் இருந்தால் மட்டுமே, பிக் பாஸ் ரசிகர்களுக்கு அது சரியான தீனியாக அமையும் என்றும் தங்களது கருத்துக்களை விஜய் டிவிக்கே அனுப்பி வருகின்றனர்.

  கன்ஃபார்ம் லிஸ்ட்

  கன்ஃபார்ம் லிஸ்ட்

  நடிகை ரேகா, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, அனுமோகன், ரியோ ராஜ், நடிகர் ஆரி, ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஆஜித், பாடகர் வேல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

  இவங்களாம் வரலை

  இவங்களாம் வரலை

  பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொள்ள உள்ளார்கள் என ஏகப்பட்ட நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், கடைசி நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த யாருமே கலந்து கொள்ளாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை கிரண், ஷில்பா மஞ்சுநாத், பூனம் பஜ்வா, விஜே அர்ச்சனா, சம்யுக்தா, லக்‌ஷ்மி மேனன், அம்ரிதா அய்யர் உள்ளிட்ட யாருமே வரவில்லையாம்.

  டாய்லெட் கழுவ முடியாது

  டாய்லெட் கழுவ முடியாது

  மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பிக்பாஸ் ரூமர்களை அவாய்டு பண்ணி விட்டும், இல்லை நான் கலந்து கொள்ளவில்லை என ட்வீட் போட்டும் ரூமர்களுக்கு முற்றுப்புள்ளியை நாசுக்காக வைத்தனர். ஆனால், நடிகை லக்‌ஷ்மி மேனன் யாரோட வீட்டு டாய்லெட்டையும் நான் கழுவ மாட்டேன், நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை என கொஞ்சம் ஓவராகவே பேசியது சர்ச்சையை கிளப்பியது.

  அவருக்கு பதிலாக

  அவருக்கு பதிலாக

  லக்‌ஷ்மி மேனன் வரவில்லை என்றால் என்ன, அவருக்கு பதிலாக விஜய்சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ப்பா என விஜய்சேதுபதியையே சொல்ல வைத்த நடிகை காயத்ரி போட்டியாளராக களம் இறங்குகிறார் என்கிற தகவல் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஆனால், அவரும் தற்போது அதனை மறுத்துள்ளார்.

  உள்ளேன் ஐயா

  உள்ளேன் ஐயா

  இந்நிலையில் நடிகை காயத்ரி, இது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம், நானும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ரசிகர்களோடு ரசிகையாக வீட்டில் அமர்ந்து கொண்டு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கப் போகிறேன். அப்செட்டாகும் ரசிகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வைத்து படம் இயக்க நினைப்பவர்களுக்கு உள்ளேன் ஐயா என அதிரடியாக ட்வீட் போட்டுள்ளார்.

  அப்செட்டான ரசிகர்கள்

  அப்செட்டான ரசிகர்கள்

  காயத்ரியின் இந்த ட்வீட் பிக்பாஸ் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. நீங்களும் இல்லை என்றால், இந்த சீசன் ரொம்பவே போர் அடிக்கும் என்றும், சரியான முடிவு, நீங்க உள்ள போகாததே நல்லது. நல்ல நல்ல படங்களில் நடிங்க, விஜய்சேதுபதியுடன் நீங்கள் நடித்துள்ள மாமனிதன் படத்திற்காக வெயிட்டிங் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Actress Gayathri tweeted, am not participated in Bigg Boss this season. Am also watch the show in my home with popcorn. Fans get upset after her tweet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X