“100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பீர்களா எனக் கேட்டார்கள்”.. பிக் பாஸ் மீது வழக்கு தொடுத்த நடிகை!

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடிகை காயத்திரி குப்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹைதராபாத்: பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியுமா என தன்னிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டதாக நடிகை காயத்திரி குப்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கிலும் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பமாக இருக்கிறது. இம்முறை அதில் யார் யாரெல்லாம் போட்டியாளர் ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

ஆனால், கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு இம்முறை தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்மறையான விசயங்கள் தான் அதிகம் ஊடகங்களில் இடம் பிடித்து வருகிறது. முதலில் யார் தொகுத்து வழங்குவது என்ற அக்கப்போர் இருந்தது. தற்போது நாகர்ஜுனா தொகுத்து வழங்குவது உறுதியாகி விட்டது.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைப்பதாக சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்வேதா புகார் தெரிவித்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பிக் பாஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை காயத்திரி குப்தா.

ஒப்பந்தம் ரத்து:

ஒப்பந்தம் ரத்து:

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பே என்னிடம் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். ஒப்பந்தம் போடப்பட்டதால், நான் வேறு எந்த புதிய வாய்ப்புகளையும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.

ஆபாசமான கேள்வி:

ஆபாசமான கேள்வி:

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் இல்லாமல் வாழ முடியுமா என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கேட்டனர். இது என்ன மாதிரியான கேள்வி என நான் அவர்களிடம் கேட்டேன். டிஆர்பிக்கு உத்தரவாதம் தரவில்லை எனில் உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என ஸ்டார் எம்ஏஏ நிர்வாகிகள் கேட்டனர்.

சம்பளம் முடிவு:

சம்பளம் முடிவு:

பிறகு ஏன் இரண்டரை மாதத்துக்கு முன்பு அவர்கள் என்னுடன் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். எனக்கான சம்பளத்தைக் கூட அவர்கள் முடிவு செய்துவிட்டனர். என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

டிஆர்பி நாடகம்:

டிஆர்பி நாடகம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சில நாடகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் என்னிடம் கூறினர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் சக போட்டியாளர்களில் யாருடனாவது ஏற்கனவே கருத்து வேறுபாடு அல்லது பிரச்சினை இருக்கிறதா என்றும் என்னிடம் அவர்கள் கேட்டனர். அவர்களை பொறுத்த வரை நான் யாருடனாவது பிரச்சினை செய்யவில்லை என்றால் டிஆர்பி கிடைக்காது.

பாலியல் தொல்லைகள்:

பாலியல் தொல்லைகள்:

பிக் பாஸ் ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் முற்றிலுமாக நியாயத்துக்கு புறம்பானது. நிகழ்ச்சிக்கு எதிராக பேசக்கூடாது என ஒப்பந்தம் போடுகின்றனர். இது அடிமைத்தனத்தை தவிர வேறு என்ன. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நாம் பேச வேண்டாமா? எனவே தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு நஷ்டஈடு வேண்டும். பிக் பாஸால் நான் நிறைய இழந்துவிட்டேன்", இவ்வாறு காயத்திரி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X