டேனியல் பாலாஜி பற்றி தவறாக பேசாதீர்கள்.. ஆதரவு தெரிவித்து காயத்ரி ரகுராம் ட்வீட்!

சமீபத்தில் வெளியான வெப்சீரியஸ் காட்மேன் பற்றிய பல சர்ச்சை வந்து கொண்டு உள்ளன. காட்மேன் வெப்சீரியஸின் கதை மற்றும் திரைக்கதை இயக்குனர் கையில் இருக்கிறது.

Recommended Video

Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

சமீபத்தில் வெளியான வெப்சீரியஸ் காட்மேன் பற்றிய பல சர்ச்சை வந்து கொண்டு உள்ளன. காட்மேன் வெப்சீரயஸின் கதை மற்றும் திரைக்கதை இயக்குனர் கையில் இருக்கிறது.

மற்றும் அதனைத் தயாரித்த தயாரிப்பாளரிடம் அதன் முழு பொறுப்பும் இருக்கையில் ஒட்டு மொத்த கவனமும் சம்மந்தமே இல்லாமல் இப்போது டேனியல் பாலாஜி பக்கம் திரும்பியுள்ளது.

 சித்தி நெடுந்தொடர்

சித்தி நெடுந்தொடர்

டேனியல் பாலாஜியின் இயற்பெயர் பாலாஜி இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கிறார் 2000ஆம் ஆண்டில் மிகப்பிரபலமான நெடுந்தொடரான சித்தி என்ற நெடுந்தொடரில் இவர் நடித்து இருப்பார். அதில் இவரின் கதாபாத்திரத்தின் பெயர் டேனியல், அதன் பின் இவர் நடித்த அலைகள் என்ற சீரியல் மூலம் அந்த பெயர் மக்களிடையே மிகவும் பிரபலமான காரணத்தினால் பாலாஜி என்ற பெயர் பின்னர் டேனியல் பாலாஜி என மக்களால் அழைக்கப்பட்டது.

மிரட்டும் வில்லன்

மிரட்டும் வில்லன்

தமிழ் திரைப்படங்களில் இவர் சேர்ந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனக்கூறலாம், ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் தொடங்கி பிகில் வரை தனது நடிப்பை ரசிகர்களுக்கு ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பார். குறிப்பாக இதில் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்தன் மூலம் இவரின் புகழ் ஓங்கியது.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

காட்மேன் வெப் சீரியஸ் அரங்கேறி வரும் சர்ச்சைகளுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என டேனியல் பாலாஜி தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதைப்பற்றி டேனியல் பாலாஜி கூறியதாவது எனக்கு கொடுத்த வசனங்களை தான் நான் அப்படியே பேசியுள்ளேன், இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை இந்த வெப் சீரியஸ் வெளிவரும்போது அதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் என கூறியுள்ளார்.

வாய்ஸ் ஓவர்

வாய்ஸ் ஓவர்

நீங்கள் பார்த்தது வெறும் டீசர் மட்டும்தான் டீசரில் பொதுவாக சில காட்சிகளை மட்டும் எடுத்து தொகுத்து வழங்குவது வழக்கம் அவ்வாறு வெளியானது தான் இந்த காட்மேன் வெப்சீரியஸ் டீசர். மேலும் வெளியானது டீசரில் என்னுடைய வசனங்கள் எதுவும் இடம்பெறாத நிலையில் என்னை சாடுவது வேடிக்கையான ஒன்று அதுமட்டுமில்லாமல் இந்த டீசரில் யாரும் அவர்களது வசனங்களை வாயசைத்து பேச வில்லை, அதில் வாய்ஸ் ஓவர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி நடந்தது எனக்கே தெரியாது. நீங்கள் பார்த்த வசனங்கள் அனைத்தும் உண்மையே ஆனால் அதற்கு நான் கொடுத்திருக்கும் பதில் வசனங்களை வைத்து பார்த்தால்தான் உங்களுக்கு உண்மை நிலை புரியும்.

 படப்பிடிப்பு மட்டுமே

படப்பிடிப்பு மட்டுமே

முழு நீள வெப் தொடரில் நான் நடித்தது ஒரு சிறுபகுதி மட்டுமே என்னுடைய படப்பிடிப்பு நாட்கள் இதில் மொத்தமே 15 நாட்கள் மட்டுமே, இந்தக் குறுகிய நாட்களுக்குள் நான் நடித்தது எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள். பொதுவாகவே மக்களை ஈர்க்க எல்லோரும் திசை திரும்ப ட்ரைலர் மூலம் பல யுக்திகளை கையாள்வது வழக்கம் தான். அப்படி செய்த சில முயற்சிகள் இன்று வேறு விதமாக பார்க்கப்படுகிறது.

அவமானபடுத்தவில்லை

அவமானபடுத்தவில்லை

காட்மேன் வெப் சீரிஸ் இன்னும் முழு படமாக வெளிவராத நிலையில் இதனைப் பற்றிய சர்ச்சைகள் வருவது என்பது ஒரு வீண் வதந்தியே. வெறும் டீசரை மட்டும் பார்த்துவிட்டு இதுதான் கதை என மக்களே ஒரு முடிவுக்கு வருவது எந்த விதத்தில் நியாயமான செயல். இதில் நாங்கள் யாரையும் எந்த மதத்தினரையும் எந்த ஒரு பிரிவினரையும் அவமானப் படுத்தவில்லை. எனவே அது தொடராக வெளிவந்து நாம் முழு படத்தையும் பார்க்கும்போது மக்களுடைய பார்வை கண்டிப்பாக மாறும் என கூறப்படுகிறது.

பொறுத்திருக்கவும்

பொறுத்திருக்கவும்

நீங்கள் பார்த்த டீசரில் வெறும் வசனங்கள் மட்டுமே வாய்ஸ் ஓவரில் வந்திருக்கும். உண்மையில் அந்த வசனங்களுக்கு பிறகு அதற்கு அடுத்து நான் பதில் கூறியிருப்பேன் இந்த இரண்டையும் பார்க்கும் போதுதான் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் அதுவரை இந்த குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கும் தயவுசெய்து இந்த வெப்சீரியஸ் வெளியாகும் வரை பொறுத்திருக்கவும்.எத்தனையோ சர்ச்சை கூறிய படங்கள் வெளி வந்த பிறகு சர்ச்சை ஓய்ந்து விடும். கதை மட்டுமே பேசும் .

 ஆதரவு கரம்

ஆதரவு கரம்

இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் செய்யாத தவறுக்கு சர்ச்சைகளில் சிக்கி வரும் டேனியல் பாலாஜிக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு கரம் நீட்டி உள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெப் சீரியஸின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை விசாரணை செய்ய வேண்டும், பிராமணர்களை நேரடியாக குறிவைக்கும் அந்த ட்ரெய்லர் கட்டை வெளியிட்ட படக்குழுவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

திரித்து வெளியிட்டு உள்ளது

திரித்து வெளியிட்டு உள்ளது

மேலும் போன் கால்களின் மூலம் சினிமா பிரபலங்களுக்கு தொல்லை கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். பாலாஜி தொடர்ந்து எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், மேலும் இந்த வெப் சீரியஸில் நடிகர்களுக்கு அவர்களின் கதாபாத்திரங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது முழுக்கதையும் விவரிக்கப்படவில்லை. இந்நிலையில் zee5 இந்த டீசரை திரித்து சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது.

பாலாஜி இந்து மதம்

பாலாஜி இந்து மதம்

காட்மேன் சர்ச்சை குறித்து நான் எனது சில சினிமா நண்பர்களுடன் பேசியுள்ளேன். இதில் நடித்த நடிகர்களை குறிவைத்து யாரும் போன் காலில் தொல்லை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நடிகர் பாலாஜி ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் டேனியல் என்ற பெயர் சித்தி தொலைக்காட்சி தொடரில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். பாலாஜி என்பது மட்டுமே அவரது உண்மையான பெயர். இதனை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பாலாஜிக்கு தனது ஆதரவு குரலை கொடுத்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

நீண்ட நாள் ஆசை

நீண்ட நாள் ஆசை

இவ்வாறு பல சர்ச்சைகளில் சிக்கி வரும் டேனியல் பாலாஜி இயற்கையிலேயே மிகவும் சாந்தமானவர் அதுமட்டுமல்லாமல் இவர் கடவுளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் அதனாலேயே இவர் தனது சொந்த செலவில் இப்போது கோவில் ஒன்றையும் நிறுவி வருகிறார். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழி தமிழில் உள்ளது. அதற்கேற்றார் போல் வெறும் டீசரில் வரும் சர்ச்சைக்குரிய வசனங்களை வைத்துக்கொண்டு படத்தின் கதை இதுவாகத்தான் இருக்க முடியும் என்று குருட்டுத்தனமாக கணிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து உள்ளன .

வெளியே வருமா

வெளியே வருமா

இந்த வெப் சீரியஸ் முதலில் வெளியாகட்டும் பின் அவரவர்களின் தனிப்பட்ட கண்ணோட்டம் அவரவர்களை பொருத்தது என்று பலர் சொன்னாலும் , எப்படியாது இதை தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என்று பலர் பல முயற்சிகள் செய்து தினமும் zee 5 குழுமத்திற்கும் அதில் நடித்த நடிகர்களுக்கும் பல விதமான மிரட்டல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எல்லாவற்றையும் எதிர்த்து போராடி இந்த வெப் சீரீஸ் வெளியே வருமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X