ஜீ5ல் ரிலீஸாகும் பிக்பாஸ் நடிகையின் படம்.. கெட்டப்பே வேற மாதிரி இருக்கே! #YaadhumaagiNindraai

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை நடித்து இயக்கியுள்ள படம் வரும் 19ஆம் தேதி ஜீ5 தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குநராகவும் நடிகையாகவும் இருப்பவர் காயத்ரி ரகுராம். பாஜக ஆதரவாளரான இவர் அக்கட்சிக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், முழு நேர நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

இதில் குரூப் ஃபார்ம் செய்துக்கொண்டு நடிகை ஓவியாவை கார்னர் செய்தார். அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசினார். இதனால் அவரது வீட்டின் முன்பும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசனின் வீட்டின் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன.

டிவிட்டர் முடக்கம்

டிவிட்டர் முடக்கம்

தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரது டிவிட்டர் கணக்கு கூட சில நாட்கள் முடக்கப்பட்டது.

உண்மை சம்பவங்கள்

உண்மை சம்பவங்கள்

இந்நிலையில் காயத்ரி ரகுராம் இயக்கி தயாரித்த படம் யாதுமாகி நின்றாய். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னணி நடனக் கலைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.

இளம் பெண்..

இளம் பெண்..

பின்னணி நடனக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் விரும்பும் கனவுகள் பற்றியும் பேசும் படம் இது. பள்ளி செல்லும் இளம் பெண் அவரது குடும்பத்தினருக்காக நடனமாட வேண்டிய கட்டாயம் ஏற்படுவதையும் அவர் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களையும் பற்றியும் உள்ளது இப்படம்.

வேற மாதிரி இருக்கிறார்

வேற மாதிரி இருக்கிறார்

காயத்ரி ரகுராம், நிவாஸ் அதிதன் நடித்துள்ள இப்படம் ஜீ5 தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை படத்தின் போஸ்டருடன் ஜீ5 நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் க்ளோஸ்டு காலர் வைத்த ஜாக்கெட், சேலை, கொண்டை என ஆளே வேறு மாதிரி உள்ளார் காயத்ரி ரகுராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X