குண்டர்கள் தாக்கி விடுவார்கள் என விஜயலக்ஷ்மிக்கு பெரும் பயம்.. நடிகை காயத்ரி ரகுராம் ஓபன் டாக்!

சென்னை: நடிகை விஜயலக்ஷ்மி குண்டர்கள் தன்னை தாக்கி விடுவார்கள் என ரொம்பவே பயந்து போயிருக்கிறார் என்று நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actress Vijaya Lakshmi current status in hospital • BP Tablets

விஜயின் ஃபிரண்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை விஜயலக்ஷ்மி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த நடிகை விஜயலக்ஷ்மி நேற்று, அளவுக்கு அதிகமான பிபி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

 ரத்த அழுத்தம் குறைந்து

ரத்த அழுத்தம் குறைந்து

மாத்திரைகளை விழுங்கிவிட்டு தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விஜயலக்ஷ்மி, தனது இரத்த அழுத்தம் குறைந்து இன்னும் சற்று நேரத்தில் இறந்துவிடுவேன் என கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 காயத்ரி ரகுராம் உதவி

காயத்ரி ரகுராம் உதவி

இதனை தொடர்ந்து நடிகைகள் காயத்ரி ரகுராம் மற்றும் கஸ்தூரி ஆகியோர் அவருக்கு மருத்துவ உதவிகளை செய்ததோடு அவரது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளை செய்தனர். குறிப்பாக நடிகை காயத்ரி ரகுராம், உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றுஅவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

 இடத்தை சொல்ல தயக்கம்

இடத்தை சொல்ல தயக்கம்

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை காயத்ரி ரகுராம் விஜயலக்ஷ்மியின் நிலைமை குறித்து பேசியுள்ளார். அதில் விஜயலக்ஷ்மி என்ன நிலையில் இருக்கிறார் என்றே சொல்லவில்லை. அவர் வசிக்கும் இடத்தை சொல்லவே அவர் தயங்குகிறார்.

 தாக்கிவிடுவார்கள் என பயம்

தாக்கிவிடுவார்கள் என பயம்

எங்கு தான் இருக்கும் இடம் தெரிந்தால் குண்டர்கள் வந்து தன்னை வீடு புகுந்து தாக்கிவிடுவார்கள் என்று பயந்து போயுள்ளார். அதே நேரம் தைரியமாக இருந்து இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணுகிறார்.

 மாஜிஸ்திரேட் விசாரணை

மாஜிஸ்திரேட் விசாரணை

மேலும் யாருடைய உதவியும் இன்றி இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்த்து போராடுவது என்றும் அவருக்கு தெரியவில்லை என்றும் நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இதனிடையே நடிகை விஜய லட்சுமியிடம் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியுள்ளார்.

 மாஜிஸ்திரேட் தகவல்

மாஜிஸ்திரேட் தகவல்

மேலும் நடிகை விஜயலக்ஷ்மியிடம் மாஜிஸ்திரேட் வெங்கடேசன் வாக்குமூலமும் பெற்றார். இதனை தொடர்ந்து ரிப்போர்ட் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X