நல்லது கொழுப்பு குறையும்.. குஷ்புவை மரண பங்கம் செய்த பிரபல பிக்பாஸ் நடிகை!

சென்னை: நடிகை குஷ்பு பதிவிட்ட டிவிட்டுக்கு நக்கலும் குசும்பும் கலந்து பதிலளித்திருக்கிறார் பிரபல நடிகை.

Recommended Video

BJP Gayathri blind support to Draupathi | Pa. Ranjith Tweet

சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்றார். அப்போது குரூப் சேர்த்துக் கொண்டு நடிகை ஓவியாவை கார்னர் செய்தார்.

கட்சி கருத்துக்கள்

கட்சி கருத்துக்கள்

அதோடு சர்ச்சைக்குரிய வகையிலும் பேசினார் காயத்ரி ரகுராம். இதற்காக அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பாஜகவிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். கட்சி தொடர்பாக அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

கைக்கூலி

கைக்கூலி

அதேபோல் கட்சி தொடர்பாகவும் கட்சியின் கொள்கைகள் குறித்தும் மத்திய அரசு குறித்தும் தவறாக பேசுபவர்களையும் உண்டு இல்லை என செய்து வருகிறார் காயத்ரி ரகுராம். அந்த வகையில் அண்மையில் இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசி தள்ளினார். அவரை பெரியாரிஸ்ட் கைக்கூலி என்றும் சாடினார்.

கொழுப்பு குறையும்

கொழுப்பு குறையும்

இந்நிலையில் நடிகை குஷ்புவை மரணமாக கலாய்த்திருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம். அதாவது நடிகை குஷ்பு, அடுத்த ஞாயிற்றுக் கிழமை முதல், ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை விட்டுவிடலாம் என திட்டமிட்டிருப்பதாக கூறினார். இதனை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம், அவரது டிவிட்டை தனது பக்கத்தில் ஷேர் செய்து நல்லது கொழுப்பு குறையும் என்று பதிவிட்டார்.

எக்கச்சக்கமா

இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் பாரபட்சம் இல்லாமல் கலாய்த்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் பாஜக சண்டை போட்ட நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகுது என பதிவிட்டுள்ளார். ஆன்ட்டி நீங்களும் ஐஸ்கிரீம கிவ் அப் பண்ணிடுங்க. ஏன்னா உங்களுக்கும் கொழுப்பு எக்கச்சக்கமா ஏறிடுச்சு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நீ ஓட்ஸ் சாப்பிடுவ

உனக்கென்னப்பா... நீ ஓட்ஸ் சாப்பிடுவ... என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். சரக்கு அடிக்கிறத முதல்ல நிறுத்துங்க. ஐஸ் கிரீம் அப்பறமா நிறுத்துங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். இதுபோன்று நெட்டிசன்கள் குஷ்புவையும் காயத்ரி ரகுராமையும் விளாசி தள்ளினர். ஒரு சீனியர் நடிகை என்றும் பாராமல் காயத்ரி ரகுராம் குஷ்புவை இப்படி அசிங்கப்படுத்தியிருக்க கூடாது என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X