பிக்பாஸ் கவினுக்கு ரொம்ப பெரிய மனசு.. புகழ்ந்து தள்ளிய விஜய் பட நடிகை!
சென்னை: கவினுக்கு ரொம்ப பெரிய மனசு என விஜயின் பிகில் படத்தில் நடித்த நடிகை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற சீரியலில் நடித்தார் கவின். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார்.

சாக்ஷி லாஸ்லியா
கன்டென்ட்டுக்காக நான்கு பேரை காதலித்ததாக கூறி ஏழரையை கூட்டினார். ஒரு பக்கம் அவரை பலர் விமர்சித்த போதும் சமூக வலைதளங்களில் இளைஞர்களின் ஆதரவையும் பெற்றார். முதலில் சாக்ஷியை காதலித்த கவின், பின்னர் லாஸ்லியாவுடன் ரொமான்ஸ் செய்தார்.

லிஃப்ட் படம்
இதற்காக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். மேலும் இயக்குநர் சேரன் குறித்தும் தரக்குறைவாக பேசியதால் கண்டனங்களுக்கு ஆளானார். இந்நிலையில் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கவின்.

கவினுடன் இணைந்து..
இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா அய்யர் நடிக்கிறார். இப்படத்தில் பிகில் படத்தில் விஜயுடன் ஃபுட் பால் டீமில் ஒருவராக நடித்த காயத்ரி ரெட்டியும் கவினுடன் லிஃப்ட் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்குகிறார்.

காயத்ரி ரெட்டி
இந்தப் படத்தின் ஷுட்டிங் லாக்டவுனுக்கு முன்னதாக கடந்த மார்ச் மாதமே நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காயத்ரி ரெட்டி தனது ரசிகர்களிடம் லிஃப்ட் படத்தின் அனுபவங்களை ஷேர் செய்தார்.

பெரிய மனசு
அப்போது வினீத் வரபிரசாத் ஒரு அருமையான நபர். அவருடன் வேலைபார்ப்பதும் அருமை என கூறியுள்ளார். மேலும் படத்தின் ஹீரோவான கவின் குறித்து பேசி காயத்ரி ரெட்டி, அவருக்கு பெரிய மனசு என்றார். மேலும் நடிகர் கிரண் கொண்டா குறித்து பேசிய காயத்ரி, அவர் தனக்கு நல்ல நண்பர், அவருடன் வேலை பார்த்தது ஜாலியாக இருந்தது என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











