மலையாளத்தில் அறிமுகமாகும் காயத்ரி ... இயக்குனர் யார் தெரியுமா?
சென்னை : இதுவரை தமிழில் தரமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காயத்ரி சங்கர் இப்பொழுது மலையாளத்தில் கால் தடத்தை பதிக்கிறார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் படத்தில் நடித்திருக்க அந்த படம் மிக விரைவில் திரையில் வெளியாக உள்ளது.
உடல் மொழியால் மட்டுமல்லாமல் குரல் மூலம் ஒத்த செருப்பு படத்தில் நடித்து பல விருதுகளுக்கு சொந்தக்காரியான காயத்ரி முதல்முறையாக மலையாளத்தில் நடிக்கும் திரைப்படத்தை பிரபல முன்னணி இயக்குனர் இயக்குகிறார்.

தமிழ் ரசிகர்களை
மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்ற நிலையில். சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சுபின் சாஹிர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

தமிழில் ரீமேக்
அந்த நிலையில் இந்த படத்தை இப்பொழுது தமிழிலும் இயக்க அதில் பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக லாஸ்லியா நடித்து வருகிறார். இயக்குனரும் நடிகருமான கே எஸ் ரவிகுமார் இதில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்த கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபு,மனோபாலா என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். தமிழில் இந்த படத்திற்கு கூகுள் குட்டப்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியுடன் மீண்டும்
ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் இந்திய அளவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இப்பொழுது தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்க அதில் நடிகை காயத்ரி சங்கர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை காயத்ரி இப்பொழுது விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார் விரைவில் ரிலீசாக உள்ளது.

மலையாளத்தில் அறிமுகம்
இதுவரை தமிழ் திரைப்படங்களில் கலக்கி வந்த காயத்ரி முதன் முறையாக மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்க டைட்டில் போஸ்டர் இப்பொழுது வெளியாகியுள்ளது படத்திற்கு "ந்நா தான் கேஸ் கோடு" என தலைப்பிட்டுள்ளனர் . காயத்ரி மலையாளத்தில் அறிமுகமாகும் "ந்நா தான் கேஸ் கோடு" படத்தை ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் இயக்குனர் இயக்குகிறார் என்ற தகவல் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வர இதன் படபிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழைப்போலவே மலையாளத்திலும் காயத்ரி கலக்குவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











