நானும் தடுப்பூசி போட்டாச்சு… புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி ஷங்கர் !
சென்னை : காயத்ரி ஷங்கர் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இவர் தேசிய விருது பெற்ற சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

பாதிப்பு தீவிரம்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. தினசரி பாதிப்புகள் தாறுமாறாக உயர்ந்துவரும் நிலையில், இளைஞர்கள், பெரியவர்கள் என பாகுபாடு இல்லாமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் மரண செய்தி வெளிவந்தவண்ணம் இருப்பதால் மக்கள் அனைவரும் அதிக பயத்திலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

தடுப்பூசிகள்
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிவீல்டு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்கின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒருபுறம் வேகப்படுத்தப்பட்டாலும், பலர் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை எண்ணி இன்னும் அச்சம் கொள்கின்றனர்.

தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்
பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில். அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், அருண்விஜய், சிம்ரன், காஜல் அகர்வால், நட்டி நடராஜன், சாக்ஷிஅகர்வால் ஆகிய நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி
இந்நிலையில், விஜய்சேதுபதியுடன் இணைந்து பல படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரிய காயத்ரி ஷங்கர் இன்று முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அவர் எந்த வகை தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











