குட்டி பாவாடையில் க்யூட் வீடியோ.. இது என்ன ஆக்டோபஸ் மாதிரி இருக்கு..வித்தியாசமான உடையில் காயத்ரி!

சென்னை : விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியாவதால் ரசிகர்கள் பலரும் இப்பொழுது அப்செட்டில் உள்ளனர்.

கா/பெ ரணசிங்கம் ஓடிடியில் வெளியாவதைத் தொடர்ந்து இப்பொழுது மாமனிதன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து விஜய் சேதுபதி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை காயத்ரி மாமனிதனிலும் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டோபஸ் போன்று வித்தியாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

விஜய் சேதுபதி மற்றும் சீனுராமசாமி கூட்டணி தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் மாமனிதன்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

எதார்த்தமான திரைப்படங்களை மண் வாசனையுடன் எடுத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் திரைப்படத்தில் காயத்ரி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து கலக்கியுள்ளார்.

மேலும் கூட்டியுள்ளது

மேலும் கூட்டியுள்ளது

மேலும் சமீபத்தில் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் காயத்ரியின் நடிப்பை ஆஹா ஓஹோ என பாராட்டி எழுதி இருந்தது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் கூட்டியுள்ளது.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்

மாமனிதன் திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு காயத்ரியின் நடிப்பை பார்த்து வியந்து வெகுவாக பாராட்டிய தாகவும், மேலும் இந்த திரைப்படம் காயத்ரியின் திரை வாழ்க்கையில் நிச்சயம் சிறந்த திரைப்படமாக அமையும் என்றும் சீனு ராமசாமி அந்த ட்விட்டர் பதிவில் கூறி இருந்தார்.

மீண்டும் மாமனிதன்

மீண்டும் மாமனிதன்

விஜய் சேதுபதியுடன் இணைந்து "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய காயத்ரி அதைத்தொடர்ந்து ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் எனத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ஒரே நடிகை என்ற பெருமையை காயத்ரி பெற்றுள்ளதோடு இப்பொழுது மீண்டும் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மூழ்கச் செய்திருந்தார்

மூழ்கச் செய்திருந்தார்

இவ்வாறு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் மூலமும் தமிழ் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வரும் காயத்ரி நடிகர் பார்த்திபனின் வித்தியாசமான நடிப்பில் உருவான " ஒத்த செருப்பு " திரைப்படத்தில் தனது அற்புதமான குரலில் அனைவரையும் அந்தக் கதாபாத்திரத்தில் மூழ்கச் செய்திருந்தார்.

வித்தியாசமான வீடியோ

வித்தியாசமான வீடியோ

இவ்வாறு நடிப்பில் பல பரிமாணங்களை காட்டிவரும் காயத்ரி திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் கவர்ச்சி காட்டாமல் இருந்த நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வேற லெவல் ட்ரெண்டானதைத் தொடர்ந்து இப்பொழுது வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளார்.

Recommended Video

THALAPATHY VIJAY என்ன TOM & JERRY னுதான் கூப்டுவாறு | GAYATHRI RAGHURAM | V-CONNECT |FILMIBEAT TAMIL
ஆக்டோபஸ் மாதிரி இருக்கு

ஆக்டோபஸ் மாதிரி இருக்கு

காற்றில் பறக்கின்றவாறு முட்டி வரை தெரிகின்ற குட்டி ஆடையை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக சுழன்று ஆடி காயத்ரி எடுத்துள்ள இந்த ரம்மியமான வீடியோவில் அவரது ஆடை ஆக்டோபஸ் போல வளைந்து வளைந்து சுற்ற அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்துபோய் இது என்ன ஆக்டோபஸ் மாதிரி இருக்கு என ஆச்சரியத்துடன் பார்த்தவாறு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X