இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நர்ஸாக நடிக்கும் பிரபல இளம் நடிகை!

சென்னை : தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி.

விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் பின் தர்மதுரை என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார் இப்பொழுது மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு வந்த சீனுராமசாமி அதில் இளம் நடிகையை ஹீரோயினியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

விஜய் சேதுபதியை ஹீரோவாக

விஜய் சேதுபதியை ஹீரோவாக

இந்திய அளவில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை ஹீரோவாக திரையில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி.இந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. கிராமத்து மண்வாசனை மாறாமல் தொடர்ந்து படங்களை இயக்கி வந்த இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றிய தர்மதுரை படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மாமனிதன்

மாமனிதன்

இப்பொழுது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் என்ற படத்தை இயக்கியுள்ளார். கிராமத்தையும் விவசாயத்தையும் மையப்படுத்தி மாமனிதன் உருவாகியுள்ளது . இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் நடித்துள்ளார். ரிலீசுக்கு தயாராக உள்ள மாமனிதன் திரையில் வெளியாகுமா இல்லை ஓடிடியில் வெளியாகுமா என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது.

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக

இதற்கிடையில் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை சீனு ராமசாமி தொடங்கி அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். அதன்படி பெயரிடப்படாத தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த முறையும் கிராமத்து கதையை கையில் எடுத்து அதனுடன் த்ரில்லரையும் சேர்த்துள்ளார் எனக் கூறப்படுகிறது. எனவே இந்த முறை வித்தியாசமான திரைப்படத்தை சீனு ராமசாமியிடமிருந்து எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது .

ஆகஸ்ட் மாதம் 2

ஆகஸ்ட் மாதம் 2

இந்நிலையில் இப்படத்தில் நடிகை காயத்ரி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.காயத்ரிக்கு கடைசியாக வெளியான சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஒத்த செருப்பு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. அதை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்லக் தர்பார், மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மாமனிதன் இன்னும் சில வாரங்களில் ரிலீஸ் ஆக இருக்க இப்பொழுது மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
பாரக் தயாரிக்க இருக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி துவங்க உள்ளது. ஆண்டிப்பட்டி, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நர்ஸ் வேடத்தில்

நர்ஸ் வேடத்தில்

மேலும் இந்த படத்தில் காயத்ரி ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார். எம்எஸ் பாஸ்கர்,கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். சீனு ராமசாமியின் முந்தைய படங்களான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே வியாபாரம் தடபுடலாக தொடங்கிவிட்டது. மேலும் இப்படத்தை திரையரங்கில் வெளியிடலாமா ஓ டி டி யில் வெளியிடலாமா என படக்குழு தீவிரமாக யோசித்து வருகிறது. அதற்காக சில முன்னணி ஓ டி டி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X