மொட்டை தலையுடன் பாலைவனத்தில் சுற்றித்திரியும் காயத்ரி ஷங்கர்.. பதறிய ரசிகர்கள்.. கடைசியில் செம ட்விஸ்ட்!

சென்னை: actress gayathrie shankar (நடிகை காயத்ரி ஷங்கர் இன்ஸ்டாகிராம்) மொட்டைத் தலையுடன் பாலைவனத்தில் இருக்கும் காயத்ரி ஷங்கரின் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரியவர் காயத்ரி சங்கர்

இவரின் அமைதியான முகம், நேர்த்தியான நடிப்பு, அளவான உடல்வாகு என அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக இருக்கிறார் காயத்ரி ஷங்கர்.

actress gayathrie shankar instagram new photoshoot trending on internet

காயத்ரி ஷங்கர்: இவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வந்த "ப்பா" என்ற வசனம் இன்றளவும் மறக்க முடியாத வசனமாகவே உள்ளது. காயத்ரி சங்கர் 2012ம் ஆண்டு வெளியான 18 வயது திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் சினிமாவில் நுழைந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேலான போதும் இப்போதும் அதே அழகுடன் இருக்கிறார்.

அடுத்தடுத்த படங்களில்: விஜய் சேதுபதியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் ,ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்ததால், இருவர் குறித்தும் கிசுகிசுவில் சிக்கினாலும், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிப்பதையே விரும்புவதாக காயத்ரி பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

actress gayathrie shankar instagram new photoshoot trending on internet

விக்ரம் படத்தில்: அண்மையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த விக்ரம் படத்தில், மலையாள நடிகர் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் காயத்ரி சங்கரின் கதாபாத்திரம் பாராட்டும் வகையில் இருந்தது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து இவர் கொரோனா பேப்பர் என்ற மலையாளப்படத்திலும், ஜான்பாஸ் ஹிந்துஸ்தான் கே என்ற இந்தி வெப்தொடரிலும் நடித்துள்ளார்.

மொட்டைத் தலையுடன்: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காயத்ரி ஷங்கர் Mad Max: Fury Road என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரம் போல மொட்டைத் தலையுடன் பாலைவனத்தில் முரட்டுத்தனமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து இருந்தார். இதைப்பார்த்து ரசிகர்கள் என்னடா இது என பதறிப்போனார்கள். கடைசியில், அந்த புகைப்படம் AI மூலம் உருவான புகைப்படம் என்று தெரிந்தது. அதன் பின் ரசிகர்கள் Mad Max லுக் காயத்ரிக்கு செம சூப்பராக இருக்கு இதுக்காவது அந்த படத்தை தமிழில் எடுங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X