உங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள், விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் சீக்ரெட் சொன்ன காயத்ரி

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்துள்ளது.

கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தில், காய்த்ரியும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

விக்ரம் படத்தில் நடித்த முக்கியமான காட்சி குறித்து நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சாதனை மேல் சாதனை படைத்த விக்ரம்

சாதனை மேல் சாதனை படைத்த விக்ரம்

தமிழ் சினிமாவில் யாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்டமான வெற்றியை 'விக்ரம்' திரைப்படம் பதிவு செய்துள்ளது. ஓடிடி வருகைகளுக்குப் பின்னர் எந்த படங்களும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடாமல் இருந்த நிலையில், விக்ரம் அதை முறியடித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது.

விக்ரம் அனுபவத்தை பகிர்ந்த காயத்ரி

விக்ரம் அனுபவத்தை பகிர்ந்த காயத்ரி

விக்ரம் படத்தில் அமர் பாத்திரத்தில் வரும் ஃபஹத் பாசிலின் காதலியாக காயத்ரி நடித்திருப்பார். இந்தப் படத்தில் வரும் ஒரேயொரு காதல் கதையும் இவர்களுடையது தான். ஃபஹத்தை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் காயத்ரி, விஜய் சேதுபதியால் கொடூரமாக கொலை செய்யப்படுவார். விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்துள்ள காயத்ரி, இந்தப் படத்தில் அவராலேயே கொலை செய்யப்படுவார். இதனை விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

உங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள்

உங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள்

இந்நிலையில், விக்ரம் படத்தில் காயத்ரி கொலை செய்யப்படும் காட்சி குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். "ஒரு படத்தில் நடிகரோ நடிகையோ இறந்து போவது போன்று நடித்தால், அவர் மீண்டும் கண்திறந்து சிரிப்பது போல ஒரு காட்சியை எடுப்பது வழக்கம். அதாவது அது நடிப்பு தான், அவர் உயிரிழக்கவில்லை என்பதை ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காக அப்படி எடுக்கப்படும். ஆனால், விக்ரம் படத்தில் நான் உயிரிழக்கும் காட்சிக்குப் பின், சிரிப்பதை போன்ற சீன் எடுக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

இந்தாங்க மக்களே நீங்க கேட்ட சாட்சி

இந்தாங்க மக்களே நீங்க கேட்ட சாட்சி

மேலும், "நேரமில்லாமல் போனதாலும், லைட்டிங் இல்லை என்பதாலும் அப்படி எடுக்க முடியாமல் போனது. அதனால் பலரும் உங்க தலையை எங்கே என கேட்டு வந்தார்கள். உங்களுக்காக தான் இந்த போட்டோவை இங்கு பகிர்கிறேன். என் தலை இங்கு தான் இருக்கிறது" என பதிவிட்டுள்ளார். அதற்கு சாட்சியாக லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் ஆகியோருடன் சிரித்தபடி எடுத்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். காயத்ரியின் இந்த இன்ஸ்டா பதிவு இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X