பிரபல மலையாள நடிகரை புகழ்ந்து தள்ளிய நடிகை காயத்ரி!
சென்னை : நடிகை காயத்ரி இப்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முதல் முறையாக மலையாளத்தில் கால் தடத்தை பதிக்கும் இவருக்கு அங்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் மலையாள முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து பணியாற்றுவது எனது பாக்கியம் என உணர்ச்சி பொங்க காயத்ரி கூறியுள்ளார்.

சிறந்த காமெடி
எண்ணற்ற வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரி பெரும்பாலும் விஜய்சேதுபதியின் திரைப்படங்களில் நடிப்பது தொடர்ந்து வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் முதன்முறையாக விஜய் சேதுபதி காயத்ரி இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இன்று வரை தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடி திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

சீனு ராமசாமி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி ,புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என விஜய் சேதுபதி உடன் தொடர்ந்து பணியாற்றிவரும் காயத்ரி இப்பொழுது மீண்டும் மாமனிதன் படத்தில் இணைந்து நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கியுள்ளார் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்
இதுவரை தமிழில் மட்டுமே வெற்றிகரமாக பல படங்களில் நடித்து வந்த காயத்ரி முதல் முறையாக மலையாளத்தில் கால் பதிக்க அங்கும் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

உணர்ச்சி பொங்க
விரைவில் மலையாள சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்க காத்துக்கொண்டிருக்கும் காயத்ரி இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை விட்டு உங்களுடன் இணைந்து பணியாற்றுவது எனது பாக்கியம் என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











