Geetha Kailasam: கவினோட பேசவே தோணாது.. கீதா கைலாசம் வெளிப்படுத்திய உண்மை!
சென்னை: நடிகர் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இரு தினங்களுக்கு முன்பு ரிலீசாகியுள்ளது ஸ்டார் படம். கவின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றி பெற்ற டாடா படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் ஸ்டார் படம் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் பழகிய கதைக்களம் தான் என்றாலும் தன்னுடைய சிறப்பான திரைக்கதையால் இந்த படத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளார் இயக்குநர் இளன்.
இருந்தபோதிலும் ஸ்டார் படத்தின் முதல் பாதி அளவிற்கு இரண்டாவது பாதி அதிகமாக ரசிகர்களை கவரத் தவறியுள்ளது. இது இந்தப் படத்தின் மைனசாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கவினுடன் இணைந்து பயணம் செய்தது குறித்து கீதா கைலாசம் தனது பேட்டியில் பேசியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசவே தோன்றாது என்றும் கூறியுள்ளார்.

ஸ்டார் படம்: லிஃப்ட், டாடா படங்களை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியாகியுள்ளது ஸ்டார். இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கவனுடன் இணைந்து அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷனை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இந்த படம் சிறப்பான முன்பதிவுகளுடன் தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளது. முதல் நாள் வசூலாக படம் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வளர்ந்து வரும் நடிகராக தமிழில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார் கவின்.
நடிகர் கவின்: அந்த வகையில் கவினுக்கு ஸ்டார் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுதரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் இதே கதைக்களத்தில் முன்னதாக அஜித்தின் முகவரி உள்ளிட்ட படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் கதையை லைட்டாக எடுத்துக் கொண்டு அதை தன்னால் முடிந்தவரை திரைக்கதையால் சுவாரஸ்யமாக்கியுள்ளார் இளன். முன்னதாக பியார் பிரேமா காதல் படம் மூலம் கவனம் ஈர்த்த இளன், ஸ்டார் படம் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் கவினுக்கு நடிக்க அனைத்து ஏரியாக்களிலும் களம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் இளன்.
நடிகை கீதா கைலாசம்: படத்தில் முதன்மை கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் துணை கேரக்டர்களுக்கும் சிறப்பான இடம் கொடுத்து கவனிக்க வைத்துள்ளார். படத்தில் கலை என்ற கேரக்டரில் நடித்துள்ள கவினுக்கு அம்மாவாக கீதா கைலாசம் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கவின் குறித்து தன்னுடைய பேட்டியொன்றில் தற்போது பேசியுள்ளார். இந்தப் படத்தில் தான் கவினுடன் தொடர்ந்து பயணித்த போதிலும் ஒட்டுமொத்த படத்திலும் செட்டில் கவனுடன் நான்கு சென்டென்ஸ்களுக்கு மேல் பேசியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு கவின் தன்னுடைய வேலையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பார் என்றும் அதனால் அவருடன் பேசவே தோன்றாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கவினுடன் பேச தோன்றாது: கவின் எப்போதும் தன்னுடைய கெட்டப்பின் மூடிலேயே செட்டிலும் இருப்பார் என்றும் கீதா கைலாசம் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் வேளையில் நமக்கு அரட்டை அடிக்க தோன்றாது என்றும் கூறியுள்ளார். அவருடன் பயணிக்கும் போது தனக்கும் தன்னுடைய கேரக்டர் குறித்த சீரியஸ்னஸ் வந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய காட்சிகள் சிறப்பாக வந்ததற்கு இதுவும் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கேரக்டருக்காக கவின் மெனக்கெட்டு செயல்பட்டது தனக்கு மலைப்பாகவும் மிகப்பெரிய உந்துதலை தரும்படியும் அமைந்திருந்ததாகவும் கீதா கைலாசம் தன்னுடைய பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
கலவையான விமர்சனங்கள்: கவினுடன் இணைந்து நடித்ததை தான் மிகவும் என்ஜாய் செய்ததாகவும் கீதா கைலாசம் தெரிவித்துள்ளார். முதல் பாதியில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ள ஸ்டார் படம், இரண்டாவது பாதியில் ரசிகர்களை கவர தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இரண்டாவது பாதியிலும் சிறப்பாக இயக்குனர் ஸ்கோர் செய்திருந்தால் இந்த ஸ்டார் ஜொலித்திருக்கும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்களில் கவனத்தை ஈர்க்க தவறினாலும் பின்னணி இசையில் தன்னை நிரூபித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. படத்திற்கு மிகப்பெரிய பலமாக அவரது இசை காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











