நக்கிட்டு கிஸ் பண்ணிடு..புது புது அர்த்தங்கள் படப்பிடிப்பில் நடிகையை அலறவிட்ட கே பாலசந்தர்!

சென்னை : 80களில் கவனிக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவராக இருந்தவர் நடிகை கீதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை.

அவர் நடித்த புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் உச்சுகொட்டும் அளவுக்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சமீபத்தில் அம்மா நடிகையாக மாறிய அவர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

actress geetha said about puthu puthu arthangal movie Shooting spot experience

நடிகை கீதா: அதில், 1978ம் ஆண்டு ரஜினி நடித்த பைரவி படத்தில் நடித்திருந்தேன். அது ஒரு ப்ளாக் அன்ட் ஒயிட் படம். அப்போ நான் ரொம்ப சின்னப் பொண்ணு, சினிமா பற்றி ஒன்னுமே தெரியாது. ரொம்ப மெனக்கெட்டு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து இருக்கிறேன். இப்போது என்னை பார்க்கும் பேன்ஸ், விஜய் அம்மா, ஜெயம் ரவி அம்மானு சொல்லுவதை கேட்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.

மறக்கவே முடியாது படம்: ஆனால், புது புது அர்த்தங்கள் படப்பிரியர்கள் இன்னும் அந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து கேட்டு வருகின்றனர். உண்மையில் அந்த படத்தையும் அந்த கேரக்டரையும் என்னால் மறக்கவே முடியாது. கே பாலசந்தர் படம் என்பதால் நடிக்கவே ரொம்ப பயமா இருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில் நானும் ரஹ்மானும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது ரெண்டு பேருக்கும் சண்டை வருவது போல சீன்.

actress geetha said about puthu puthu arthangal movie Shooting spot experience

நக்கிட்டு கிஸ் பண்ணு: அந்த காட்சியில் நடித்துக்கொண்டு இருக்கும் போது, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு இருந்த சாசை ரஹ்மான் மீது ஊற்றிவிட்டேன். இதை சற்றும் எதிர்பாராத பாலசந்தர் இதுவும் நல்லாத்தான் இருக்கு, நீ ஒன்னு பண்ணு அந்த சாசை அப்படியே நாக்கால் நக்கிட்டு கிஸ் பண்ணிடு என்றார். அப்போதுதான் கணவனை சமாதானம் செய்வது போல காட்சி ரியலா இருக்கும் என்றார் என்று அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார்.

actress geetha said about puthu puthu arthangal movie Shooting spot experience

ஹிட்படம்: புது புது அர்த்தங்கள் திரைப்படம் கே பாலசந்தர் இயக்கத்தில், 1989ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படமாகும். இப்படத்தில், நடிகர் ரஹ்மான் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு மனைவியாக கீதா நடித்திருப்பார். கணவர் மீது அதீத அன்பு வைத்திருக்கும் மனைவிக்கு அதுவே கணவர் மீதான சந்தேகமாக மாறி இருவரின் பிரிவுக்கு சந்தேகமே காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் இப்படத்தின் பாடல் இன்றைய தலைமுறை ரசிகர்களும் பிடித்த பாடலாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X