2 நாட்களாக தொடர்ந்து நடித்த இளம் நடிகை.. திடீர் கார்டியாக் அரஸ்ட்.. ஐசியூவில் அட்மிட்.. கவலைக்கிடம்!

Recommended Video

இளம் நடிகை திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: தொடர்ந்து இரண்டு நாட்களாக நடித்த இளம் நடிகை திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திப்படங்களின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை கெஹெனா வசிஸ்து. இவர் இந்தி மட்டுமின்றி அதிகளவு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழிலும் பேய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் கெஹனா வசிஸ்து. ஸ்பானிஷ் படத்திலும் லீடிங் ரோலில் நடித்து வருகிறார் கெஹனா.

நடிப்பில் பிஸி

நடிப்பில் பிஸி

அதுமட்டுமின்றி சீரியல்கள், வெப் சீரிஸ்கள் என்றும் பிஸியாக உள்ள கெஹனா, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிடாமல் நடிப்பதில் பிஸியாக இருந்திருக்கிறார் கெஹனா.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

தொடர்ந்து 48 மணிநேரம் அவர் நடித்துள்ளார். சரியாக சாப்பிடாமல் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்டியாக் அரஸ்ட்

கார்டியாக் அரஸ்ட்

ஐசியூவில் இருக்கும் கெஹனா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ள அவர் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு சாப்பிடாமல் எனர்ஜி டிரிங்ஸ் அதிகளவு எடுத்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.

சுவாச குழாய்

சுவாச குழாய்

இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது. அவருக்கு மூச்சுவிடும் பிரச்சனை உள்ளது. இதனால் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

கவலைக்கிடம்

கவலைக்கிடம்

கெஹனாவின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அவரது நிலைமை இன்னமும் கவலைக்கிடமாக உள்ளதால் இந்தி திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X