நடிகையுடன் சேர்ந்து ஆபாசப்படம்.. முக்கிய நபரின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ. 5 கோடி பறிமுதல்!
மும்பை: நடிகையுடன் சேர்ந்து ஆபாசப்படம் எடுத்த விவகாரத்தில் முக்கிய நபரின் வங்கிக் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் கண்மணி இயக்கத்தில் வெளியான படம், 'பேய்கள் ஜாக்கிரதை'. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், கெஹனா வசிஸ்த்.
இந்தி நடிகையான இவர், அங்கு பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

ஆன்லைனில் ஆபாச படம்
தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், இந்தி டிவி சீரியல்களிலும் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மிஸ் ஆசிய பிகினி டைட்டிலை வென்ற இவர், பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தனி ஆன்லைன் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் ஆபாச படங்களைப் பதிவேற்றினார்.

ஆபாச படங்கள் தயாரிப்பு
இதைப் பார்க்க, ரூ.2000 கட்டணம் வசூலித்து ஏராளமான சப்ஸ்க்ரைப்பர்களையும் சேர்த்துள்ளார் கெஹனா. தனது ஆன்லைன் சேனலுக்காக வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வமுள்ள நடிகர் நடிகைகள் சிலருடன் இணைந்து ஆபாச படங்களை தயாரித்தார்.

நடிகை கைது
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மலாட்- மல்வானி பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தனி அறையில் ஆபாச படம் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து அதில் தொடர்புடையதாக, நடிகை கெஹனா வசிஸ்த்தை போலீசார் கைது செய்தனர்.

87 வீடியோக்கள் பறிமுதல்
மேலும் இதுதொடர்பாக 9 பேரை கைது செய்த போலீசார், நடிகை கெஹனா வசிஸ்த்திடம் இருந்து 87 ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே கெஹனாவுடன் சேர்ந்து ஆபாச படமெடுத்த முக்கிய நபரான மும்பையை சேர்ந்த யஷ் தாக்கூரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.5 கோடி பறிமுதல்
இந்நிலையில் யஷ் தாக்கூரின் இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து 5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 2.5 கோடி ரூபாயும், கான்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் இருந்து 2.5 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

பிளிஸ் ஆப் மூலம் பணம்
இந்த இரண்டு வங்கிக் கணக்குகளையும் தான் சிங்கப்பூரில் இருப்பதாக கூறி என்ஆர்ஐ கணக்காக மெயிண்டைன் செய்து வந்துள்ளார் யஷ் தாக்கூர். மேலும் பிளிஸ் ஆப் மூலம் அவர் பணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது. பணத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள யஷ் தாக்கூரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications