விஜய் - ஜெனிலியா இடையே அழகான கெமிஸ்ட்ரி... நடிகை போட்ட ட்வீட்!

சென்னை: விஜய், ஜெனிலியா, ரகுவரன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. இப்படம் சம்மரில் வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகை ஜெனிலியா சச்சின் திரைப்படம் எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான படம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விஜய் - ஜெனிலியா கெமிஸ்ட்ரி: இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், பிபாசா பாசு, சந்தானம், தாடி பாலாஜி உள்ளிட்ட பலரும் சச்சின் படத்தில் நடித்திருந்தனர். இப்படம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்நிலையில், விஜய் நடிப்பில் ரசிகர்களுக்கு பிடித்த டாப் 10 படங்களில் சச்சின் படமும் ஒன்று.

Vijay Genelia Sachin

ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் காதல் படங்களில் இப்படமும் இடம்பிடித்திருக்கும். காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் - ஷாலினிக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியை போன்று இப்படத்தில் விஜய்க்கும் - ஜெனிலியாவுக்குமான கெமிஸ்ட்ரியை பார்க்கவே அழகாக இருக்கும்.குறிப்பாக, சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹா ஹா ஹாசினியை எந்த அளவிற்கு மக்கள் ரசித்தார்களோ! அதை விட ஷாலினி கதாப்பாத்திரத்தை ரசித்து மகிழ்ந்தனர். துறுதுறுவான பெண்ணாகவும், குளிரில் நடுங்கும் கால்கள், விஜயுடன் சண்டையிடும் போதும் சரி மிக எதார்த்தமான காதல் கதையை பார்த்த அனுபவம் கிடைத்தது.

Vijay Genelia Sachin

விஜய் - வடிவேலு காம்போ: விஜய் - வடிவேலு காம்போவில் உருவான ப்ரண்ட்ஸ், மதுர, சுறா, மெர்சல் பட காமெடி சீன்களை நினைக்கும் போதே சிரிப்பு சத்தம் தான் கேட்கும். அதேபோன்று, சச்சின் படத்தில் அய்யாசாமியாக வரும் வடிவேலுவின் பாடிலாங்குவேஜும், ஜெனிலியாவிடம் காதலை சொல்லும்போது பல்பு வாங்கும் சீன்களும் ரசிக்கும் படி இருந்தன. பாலிவுட் நடிகை பிபாசா பாசு கெளரவ தோற்றத்தில் வந்து சென்றாலும் விஜயுடன் சேர்ந்து நடனம் ஆடி ரசிகர்களை கிரங்க வைத்தார். விஜய் - வடிவேலு காம்போ என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது, சிரிப்புக்கு கேரண்டி தான். படம் நெடுக காமெடியும் காதலும் கலந்த ரொமாண்டிக்கான திரைப்படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Vijay Genelia Sachin

கண் கலங்க வைத்த சீன்கள்: படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு குழந்தை விஜயின் பெயரை கேட்கும் காட்சி மிக அழகாக இருக்கும். இயக்குநர் ஜான் மகேந்திரன் விஜய்க்காக எழுதப்பட்ட கதை இல்லை என்று சொன்னாலும், இப்படம் அவருக்காகவே காட்சிகள் அமைக்கப்பட்டது போல் இருந்தன. கத்தி, ரத்தம், சண்டை காட்சிகள் இல்லாத புதுமையான விஜயை சச்சின் படத்தில் காண முடிந்தது. இப்படத்தில் விஜய் துள்ளல் ஆன இளைஞனாக வந்து மக்களை ரசிக்க வைத்தார். நோயால் குழந்தை இறக்கும் போது சிரிக்க வைக்கும் காட்சிகளை இன்றளவும் மறக்க முடியாது. ஷாலினி சச்சினின் காதலை ஏற்காதபோதும், காதலிக்காக ஏங்கி தவிப்பதை நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார் விஜய்.

ஜெனிலியா ட்வீட்: சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆவது குறித்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை ஜெனிலியா, சச்சின் திரைப்படம் என் மனதிற்கு நெருக்கமான படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X