டயோசீசன் கூட்டத்தில மோதல்: நடிகைக்கு கொலை மிரட்டல்- 3 பேர் மீது வழக்கு
நாசரேத்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் டயோசீசன் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் அதிமுக நடிகைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து லே செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மக்குடி கோட்டையைச் சேர்ந்தவர் எமி. மாவட்ட முன்னாள் கவுன்சிலரான இவர் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். பல படங்களில் போலீஸ் வேடமேற்று நடித்துள்ளார். தற்போது அதிமுகவில் உள்ளார்.
நாசரேத்தில் திருமண்டல செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற எமி தனது கருத்துகளை எடுத்துக் கூறினார். இதற்கு லே செயலாளர் மோகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயகுமார் ரூபன், ஜான்சன் ஆகியோர் ஆட்பேசனை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இது குறித்து எமி நாசரேத் போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை லே செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். சிறப்பு எஸ்.ஐ. சுப்பிரமணியன் விசாரணை நடத்தி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த லே செயலாளர் மோகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.


Click it and Unblock the Notifications











