கர்ப்பப்பையை அகற்றும் நடிகை .. சீமானால் 7 முறை கருக்கலைப்பு.. பிரச்னையின் அடுத்த ஸ்டேஜ்!
சென்னை: இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சித் தலைவராக உள்ள சீமான் தன்னை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிப் பழகி ஏமாற்றிவிட்டதாக நடிகை புகார் அளிப்பது அதனை வாபஸ் பெறுவதுமாக இருந்தார். இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு வேண்டும் என சீமான் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகைக்கு ஆதரவாக பல அரசியல் தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். முன்னர் நடிகைக்கு ஆதரவாக இருந்தவர் என்றால் அது, தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த வீரலட்சுமி. இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று முன்தினம் காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகி பதில் அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேச்சு நாகரீகமற்றதாக இருந்தது. அவர் தரப்பு வாதத்தை பதிலை அவர் தெரிவிப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கப்போவதில்லை. அதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் மோசமானது. மேலும் அவரது பேச்சு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரைப் போல் பேசாமல், தரக்குறைவாக பேசினார். அவரது இந்த தரக்குறைவான பேச்சுக்குப் பின்னர், நடிகைக்கு ஆதரவு மேலும் பெருகி உள்ளது எனலாம்.

கருகலைப்பு: இந்நிலையில் தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீர லட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ பலருக்கும் பகீர் கிளப்பியுள்ளது. அதாவது, அதில் அவர் பேசும்போது, " நடிகை எனக்கு போன் செய்து பேசினார். தான் முன்பு பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். நடிகைக்கு ஆதரவாக நாங்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். மேலும் அவர் என்னிடத்தில் பேசும் போது கூறிய சில விஷயங்கள் என்னை மன அழுத்ததிற்கு ஆளாக்கியுள்ளது.

கர்ப்பப்பை: அதாவது, சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதால் கருப்பையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் கருப்பையை நீக்க சொல்லியுள்ளார்கள் எனக் கூறினார் இது எனக்கு அதிர்ச்சியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது" எனக் கூறியுள்ளார். இவரது இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவர் கூறியுள்ள தகவல் ஏற்கனவே உள்ள பிரச்னையின் தன்மையை மேலும் தீவிரமாக்கும் என்றும் பலர் கூறிவருகிறார்கள். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை முடிவில் என்ன மாதிரியான தீர்ப்பு வரும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

ஆடியோ: இது தொடர்பாக நடிகை வெளியிட்ட ஆடியோவில், நான் சீமான் மீது குற்றச்சாட்டை கூறும்போது நாம் தமிழர் கட்சியினர், நடிகை கஸ்தூரி உட்பட பலரும் என்னை கொச்சையாக விமர்சித்தார்கள். இப்போது என்னிடம் இருக்கும் லிங்கை (Link) பார்க்கும்போது நடிகை கஸ்தூரியை நான் கொச்சை கொச்சையாக திருப்பிக் கேட்கவா? விருப்பப்பட்டு வந்தேன், விருப்பப்பட்டு வந்தேன் எனக் கூறினால் நான் என்ன விபச்சாரியா? நான் விருப்பப்பட்டு போனேன் என சீமான் தான் சொல்லிக்கொண்டு உள்ளார். ஆனால் நான் எந்த இடத்திலும் கூறவில்லை” எனக் கூறவில்லை. இவரது ஆடியோவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு என்ன வரும் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











