பாறையின் நடுவே கலக்கலான போட்டோஷூட் .. குட்டி ஜானுவின் திகைப்பூட்டும் பிக்ஸ் !

சென்னை : 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை கௌரி இப்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடித்த ஒரே ஒரு திரைப்படத்திலேயே ஓஹோ என புகழ்பெற்ற கௌரி இப்பொழுது மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த கௌரி இப்பொழுது பீச்சில் கலக்கலான போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளார்.

ரீமேக்

ரீமேக்

இளம் வயதிலேயே எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள கௌரி ஜி கிஷன்-க்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது போல நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்று தெலுங்கில் அது ரீமேக் செய்யப்பட்டு அதிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இளம் வயது கதாபாத்திரத்தில்

இளம் வயது கதாபாத்திரத்தில்

த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து காதலை வேறு கோணத்தில் அனைவரும் ரசிக்கும் வகையில் காட்டி இருந்தா 96 திரைப்படத்தில் ஜானுவின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த கௌரி பல்வேறு பாராட்டுக்களை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் குட்டி ஜானுவாக நடித்து அசத்தி இருந்தார்.

கர்ணன்

கர்ணன்

இவ்வாறு ரசிகர்கள் அனைவரையும் 96 படத்தில் வரும் ஜானு கதாபாத்திரத்தில் கவர்ந்த கௌரி அதைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வர தமிழில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் "மாஸ்டர்" திரைப்படத்திலும், மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும்" கர்ணன் " படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

அதைத் தொடர்ந்து கௌரி லீட் ரோலில் நடிக்கும் " மறையாத கண்ணீர் இல்லை" திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இப்பொழுது இவர் வெளியிட்டுள்ள பீச் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் அசர வைத்துள்ளது.

தித்திக்கும் அழகால்

தித்திக்கும் அழகால்

பாறையின் மேல் ஆரஞ்சு நிற உடையில் ஏதோ ஒரு வித மயக்கத்தில் கிறங்கி போய் மல்லாக்க படுத்தவாறு தனது அழகால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். கௌரியின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளதோடு ரசிக்கவும் வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X