"குட்டி ஜானு" கௌரி கிஷான் நடிக்கும் "மறையாத கண்ணீர் இல்லை".. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை : விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் 96 பட புகழ் கௌரி கிஷான் நடித்து வருகிறார்.

Recommended Video

Thalapathy 64 Shoot spot | Lokesh Kanagaraj |Vijay | Vijay Sethupathi | Karnataka

இதற்கிடையில் மலையாள திரைப்படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வரும் கௌரி சமீபத்தில் அனுகிரகீதன் ஆண்டனி என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய கௌரி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

முதல்முறையாக இணைந்து

முதல்முறையாக இணைந்து

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா என இரண்டு உச்ச நட்சத்திரங்களும் முதல்முறையாக இணைந்து நடித்த 96 திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது.

பாராட்டுகளைப் பெற்று

பாராட்டுகளைப் பெற்று

96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும், திரிஷாவின் நடிப்பும் மிக பிரபலமாக பேசப்பட்ட நிலையில் அதே அளவு இந்த படத்தில் குட்டி ஜானுவாகவும் குட்டி ராமாகவும் நடித்த கௌரி மற்றும் ஆதித்யா போன்றோரின் நடிப்பு பலரையும் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்று வந்தது. இந்நிலையில் குட்டி ஜானுவாக நடித்த கௌரி தனது க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு நடித்த முதல் திரைப்படத்திலேயே பல கோடி ரசிகர்களை பெற்றார்.

கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட தெலுங்கிலும் குட்டி ஜானுவாக கௌரியே நடித்திருக்க தெலுங்கு ரசிகர்களுக்கும் இவர் மிகவும் பரிச்சயம் ஆனார். இவ்வாறு 96 கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தை தொடர்ந்து பல ரசிகர்களைக் கொண்டுள்ள கௌரி தற்பொழுது தமிழ்சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அனுகிரகீதன் ஆண்டனி

அனுகிரகீதன் ஆண்டனி

மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவராத நிலையில், சமீபத்தில் இவர் மலையாளத்தில் நடித்த "அனுகிரகீதன் ஆண்டனி" என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார்.

பிறந்தநாளை கொண்டாடிய

பிறந்தநாளை கொண்டாடிய

எனினும் இவரை மீண்டும் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று கௌரி தனது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

மூன்றுவிதமான தோற்றங்களில்

மூன்றுவிதமான தோற்றங்களில்

தமிழில் 96, மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் நடித்துவரும்
"மறையாத கண்ணீர் இல்லை" என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டு, பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை கௌரி பகிர்ந்துள்ளார். மூன்றுவிதமான தோற்றங்களில் இருக்கின்றவாறு வெளியிட்டுள்ள இந்த புது பட போஸ்டரை பார்த்த இவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள நிலையில் இந்த வித்தியாசமான போஸ்டர் மற்றும் வித்தியாசமான டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X