பரஞ்சோதி பட ஷூட்டிங்கில் சாமி வந்து ஆடிய நடிகை அன்சிபா!
பரஞ்சோதி படத்தின் ஷூட்டிங்கில் அம்மனைக் கும்பிடும் காட்சியில் நிஜமாகவே சாமி வந்து ஆடினார் நடிகை அன்சிபா.
ஹீரோயின் இப்படி திடீரென சாமி வந்து ஆடியதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பாகி விட்டதாம்.
அதேசமயம் காட்சி தத்ரூபமாக அமைந்ததால் இயக்குநருக்கு திருப்தியாகி விட்டதாம்

தாய்மாமன்- மருமகன் கதை
தாய்மாமனுக்கும், மருமகனுக்குமான பாசத்தை கருவாக வைத்து, ஐ.பி.எல். சினிமாஸ் பட நிறுவனம், 'பரஞ்சோதி' என்ற படத்தை தயாரித்து வருகிறது.

காட்டுக்கூடலூர் மாரியம்மன் கோவிலில்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிதம்பரத்தை அடுத்த காட்டுக் கூடலூர் என்ற கிராமத்தில் நடந்தது. அங்குள்ள ஒரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் கதாநாயகி அன்சிபா சாமி கும்பிடுவது போலவும், அப்போது அவருக்கு அம்மன் அருள் வந்து சாமியாடுவது போலவும் ஒரு காட்சியை படமாக்கப்பட்டது.

கட் சொல்லியும் விடாமல் ஆடிய அன்சிபா
காட்சியை படமாக்கி முடித்ததும் இயக்குநர் கோபு பாலாஜி, 'கட்' சொன்னார். ஆனால் அதன்பிறகும் அன்சிபா ஆவேசமாக சாமி ஆடிக்கொண்டிருந்தார்.

விபூதி அடித்து மலையேற்றிய பூசாரி
உடனே கோவில் பூசாரி, அன்சிபா தலையில் விபூதி போட்டு வேப்பிலை அடித்து, சாமியை மலையேற்றினார். அன்சிபாவுக்கு நிஜமாகவே அருள் வந்து சாமி ஆடியது அப்போதுதான் அனைவருக்கும் தெரியவந்தது.

நிசமா்கவே அழுத ஹீரோ
கதாநாயகன் சாரதி தேம்பி தேம்பி அழவேண்டிய ஒரு காட்சியில், அவர் நிஜமாகவே உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுது சிறப்பாக நடித்து முடித்தார்.

கட்டிப்பிடித்துப் பாராட்டிய ஹீரோயின்
உடனே படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்த கதாநாயகி அன்சிபா ஓடிச்சென்று, சாரதியை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாராட்டினார்.

கஞ்சா கருப்பு- ஷகீலா
வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில் கஞ்சா கருப்பு, ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சபேஷ்-முரளி இசையமைக்கிறார்கள். எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.லட்சுமணன் தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











