ஹாரர் மூவியில் ஹன்சிகா - இது சிரிப்பு பேயாம்

சென்னை: நடிகை ஹன்சிகா மீண்டும் ஒரு பேய் படத்திலும் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த்துடன் இணைந்து நடிக்கிறார் ஹன்சிகா. அந்த படத்தில் ஶ்ரீசாந்த் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

இது வரை சினிமாவில் சில ஹீரோயின்கள் மட்டுமே 50 படங்களை தாண்டி நடித்துள்ளனர். அந்த வரிசையில் தற்பொழுது நடிகை ஹன்சிகாவும் இணைகிறார். தளபதி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றியவர் ஹன்சிகா.

சமீப காலமாக தமிழ் சினிமா கதாநாயகிகள், டூயட் பாடுவதோடு நில்லாமல், தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க தொடங்கிவிட்டனர். இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நயன்தாரா. அதை பின்பற்றி தொடர்ந்து த்ரிஷாவும் தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் தற்போது நடிகை ஹன்சிகாவும் இணைந்துவிட்டார்.

ஹாரர் மூவியில் ஹன்சிகா

ஹாரர் மூவியில் ஹன்சிகா

புதிய படங்களில் நடிக்க, தன்னை அணுகும் இயக்குநர்களிடம், நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே கேட்டு வந்தார். தற்போது அப்படி ஒரு கதையை கேட்டு ஓகே செய்து நடிக்க முன்வந்துள்ளார் ஹன்சிகா. இது வழக்கம்போல் ஒரு திகில் காமெடி படமாக உருவாகிறது.

ஹன்சிகா 50

ஹன்சிகா 50

ஹன்சிகா கடைசியாக தமிழில் 100 என்ற திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவரது 50ஆவது பட வேலைகள் துவங்கியுள்ளது. இந்த படத்திற்கு மஹா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்க உள்ளார் ஜமீல். இவர் ரோமியோ ஜீலியட், கன் படங்களை இயக்கிய இயக்குநர் லக்ஷ்மனுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

ஸ்ரீசாந்த் உடன் ஹன்சிகா

ஸ்ரீசாந்த் உடன் ஹன்சிகா

மற்றும் இன்னொரு பேய் படத்திலும் நடிக்க இருக்கிறார் ஹன்சிகா. அந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த்துடன் இணைந்து நடிக்கிறார் ஹன்சிகா. அந்த படத்தில் ஶ்ரீசாந்த் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீசாந்த் இதற்கு முன்பே பிக் பிக்சர், அக்சர் 2, டீம் 5 போன்ற படங்களில் நடித்துள்ளார். டீம் 5 படத்தில் நிக்கி கல்ராணி, பியர்ன் மானே, பிரதீப் கோட்டயம் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

2020ல் ரிலீஸ்

2020ல் ரிலீஸ்

இந்த படத்தை இயக்க உள்ளனர் ஹரி சங்கர் மற்றும் ஹரீஸ் நாராயணன். இவர்கள் இருவரும் இதற்கு முன் அம்புலி 3டி படத்தை இயக்கி இருந்தனர். அதற்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து இயக்கிய ஆ படம் தோல்வி அடைந்தது. இதன் பின் இவர்கள் இணைந்து இந்த படத்தை இயக்க உள்ளனர். இந்த படத்தில் ஹன்சிகா உடன் சனம் செட்டி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது. 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X