Don't Miss!
- News
பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய ஹான்சிகா மோத்வானி..தடபுடலாக தயாராகும் ஜெய்ப்பூர் அரண்மனை!
மும்பை : நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் நெருங்கி வரும் நேரத்தில், அவர் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார்.
எங்கேயும் காதல் படத்தில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஹன்சிகாவை பார்த்ததும் மொத்த தமிழ் ரசிகர்களும் அவுட்டாகிவிட்டனர்.
யாருடா இந்த பொண்ணு சும்மா கும்முனு இருங்காங்களே என்று சின்ன குஷ்பூ என பெயர் வைத்து அழகே...அழேகே அழகின் அழகே நீயடி என கவிதைபாட ஆரம்பித்துவிட்டனர்.

நடிகை ஹன்சிகா மோத்வானி
நம்ம ஊருக்கு வந்த சின்ன குஷ்பு என பெயர் எடுத்த ஹன்சிகா உதயநிதியுடன் ஒருகல் ஒருகண்ணாடி, தனுஷுடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம், சிம்புவுடன் வாலு உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சிம்புவுடன் வாலு படத்தில் நடிக்கும் போது அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. வழக்கமாக சிம்பு யாருடன் இணைந்து நடித்தாலும் இதே கிசுகிசுத்தான் வரும் என்பதால் ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை.

சோஹேல் கதுரியா
நடிகை ஹன்சிகாவுக்கு அவருடைய நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியா என்பவருடன் டிசம்பர் 4ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக புகழ்பெற்ற 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை தயாராகி வருகிறது. திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அதிக பொருட்செலவில் நடத்த பக்காவாக பிளான் போட்டு கோட்டையை தயார் செய்துள்ளனர்.

தடபுடலான ஏற்பாடு
டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இரவுடன் தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி, ஹல்டி சடங்குகள் காலையில் நடத்தப்படும், அதே நேரத்தில் ஃபெராக்கள் இரவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அழகான புகைப்படம்
சோஹேல் கதுரியா, ஹன்சிகா மோத்வானிக்கு பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன் தங்கள் காதலை உலகிற்கு தெரியப்படுத்தினர். ஹன்சிகாவின் காதலர் சோஹேல் செயின் நதியின் குறுக்கே ஈபிள் கோபுரத்தை பின்னணியில் 'மே ரீ மீ' என்று கேட்டு காதலை முன்மொழிந்தார். அப்போது இருபுறமும் பட்டாசுகளுடன் தரையில் இதய வடிவில் மெழுகுவர்த்திகள் கண்ணை பறித்தன.

பேச்சுலர் பார்ட்டி
இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது நெருங்கிய நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த பார்ட்டியின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹன்சிகா, மணப்பெண் என்று எழுதப்பட்ட உடையை அணிந்து கொண்டு தேவதைப்போல இருக்கிறார். அவரது நண்பர்கள் கறுப்பு உடையில் இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது டிராண்டாகி வருகிறிது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
கோலாகலமாக நடக்கவிருக்கும் ஹன்சிகா மோத்வானியின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.