15 வயதில் ஹீரோயின்.. ஹார்மோன் ஊசி.. தோழியின் கணவருடன் திருமணம்.. ஹன்சிகா மோத்வானி சந்தித்த சிக்கல்!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்து அனைத்து முன்னணி நடிகர்களில் படத்திலும் நடித்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பால், தனக்கென தனி அடையாளத்தை பெற்ற ஹன்சிகா மோத்வானி இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1991ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஹன்சிகா பிறந்தார். அவரது தந்தை பிரதீப் ஒரு தொழிலதிபர், அம்மா மோனா ஒரு தோல் மருத்துவர். இவரது பெற்றோர், 2004 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் ஹன்சிகா தனது தாய் மற்றும் அண்ணனுடன் மும்பையில் குடியேறி பள்ளிப்படிப்பை முடித்தார். படித்துக்கொண்டு இருக்கும் போதே, குழந்தை நட்சத்திரமாக 'கோயி மில் கயா' இந்தி படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்தார்.அமிதாப் பச்சனுடன் 'ஹம் கோன் ஹை' படத்தில் நடித்தார்.

15 வயதில் ஹீரோயின்: அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, 'தேசமுதுரு' படத்தில் அல்லு அர்ஜுனுடன் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தில் நடிக்கும்போது ஹன்சிகாவிற்கு வெறும் 15 வயதுதான். ஆனால், 15 வது சின்ன பெண் என்று சொல்ல முடியாத அளவிற்கு இருந்ததால், அவர் ஹார்மோன் ஊசி செலுத்தியதாக கூட அப்போது சர்ச்சை எழுந்தது. அந்த படத்தை தொடர்ந்து, இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தியவர், 2011-ம் ஆண்டு வெளியான 'மாப்பிள்ளை' படத்தில் தனுஷுடன் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் எங்கேயும் காதல்,ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம், தீயா வேலை செய்யணும் குமாரு, வேலாயுதம், மனிதன், வாலு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் நடித்து பெயர் எடுத்தார்.
தடபுடலான திருமணம்: நடிகை ஹன்சிகா மோத்வானி, 2022 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடலாக நடைபெற்றது. தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும், தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகா மோத்வானிவை திருமணம் செய்து கொண்டார் என்றும் இணையத்தில் செய்தி பரவியது. சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் முக்கிய காரணம் என்றும் தகவல் வெளியானது.
விவாகரத்து வதந்தி: திருமணத்திற்கு பிறகும் படத்தில் ஹன்சிகா நடித்து வந்த நிலையில், ஹன்சிகா மோத்வானி, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியா பிரிந்து அம்மாவுடன் தனியாக வாழ்த்து வருவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஹன்சிகா மோத்வானி தனது தாயுடனும், சோஹேல் தனது பெற்றோருடன் தனியாக வசித்து வருவதாக செய்தி வெளியாகி வருகிறது. இணையத்தில் பரவும் இந்த செய்தி குறித்து ஹன்சிகா எந்தவிதமான மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











