இந்த நடிகைக்கு 28 வயசுதான் ஆகுது.. ஆனா சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆயிடுச்சே.. யாருன்னு பாருங்க!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் தனது 28 வயதில் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர். இவரது தாய் மோனா மோத்வானி ஒரு டெர்மட்டாலஜிஸ்ட் ஆவர்.
ஹன்சிகா மோத்வானிக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவர் பெயர் பிரஷாந்த் மோத்வானி. 28வது வயதில் உள்ள ஹன்சிகா, தனது 8வது வயதிலேயே நடிப்புக்கு அறிமுகமாகிவிட்டார்.

குழந்தை நட்சத்திரம்
தேஸ் மெய்ன் நிக்ல்லா ஹோகா சந்த் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் ஹன்சிகா. இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஹன்சிகா.

குழந்தை நட்சத்திரம்
இதனை தொடர்ந்து ஷக்கலக்க பூம் பூம் உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் நடித்தார் ஹன்சிகா. முதல் முறையாக பாலிவுட்டில் ரித்திக் ரோஷனுடன் குழந்தை நட்சத்திரமாக கோய்.. மில் காயா என்ற படத்தில் நடித்தார்.

முன்னணி நடிகர்கள்
அந்தப்படத்தில் அவரது நடிப்பு அருமையாக இருந்ததால் பலராலும் கவரப்பட்டார். தொடர்ந்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் ஹன்சிகா மோத்வானி.

வயதானவர் போன்று
ஹன்சிகா மோத்வானிக்கு 16 வயதானே போதே அவர் ரொம்பவும் வயதானவர் போன்று இருப்பதாக பலரும் கூறினர். இதனை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஹிமேஷ் ரேஷம்மியாவுக்கு ஜோடியாக ஆப் கா சுர்ரூரில் நடித்தார் ஹன்சிகா.

உயர்ந்த புருவங்கள்
ஹன்சிகா மோத்வானி குழந்தையிலிருந்து ஒரு இளம் பெண்ணாக மெதுவாக மாறுவதை அவரது போட்டோக்கள் காட்டின. அவற்றை பார்த்த பலரும் ஹன்சிகா மோத்வானியா இது என புருவங்களை உயர்த்தினர். அதே ஆண்டில், அல்லு அர்ஜுன் நடித்த தேசமுதுரு மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

தமிழ் தெலுங்கு சினிமா
அவரது அடுத்த பாலிவுட் படம் நடிகர் கோவிந்தாவுடன். மனி ஹை தோ ஹனி ஹாய் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும், அவர் தென் திரையுலகின் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றி படங்களில் நடித்தார்.

மாப்பிள்ளையில் அறிமுகம்
ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களின் மூலம் பெரும் பிரபலமானார். 2011ஆம் ஆண்டு தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார் ஹன்சிகா. அதே ஆண்டில் அடுத்தடுத்து எங்கேயும் காதல், வேலாயுதம் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யனும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, மனிதன், போகன் போன்ற படங்களில் நடித்தார் ஹன்சிகா.

தேசமுதுரு
ஹன்சிகா மோத்வானியின் தெலுங்கு சினிமா பயணத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால், 2007ல் தேசமுதுரு படத்தில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து காந்த்ரி, மஸ்கா, ஓ மை ஃப்ரெண்ட், பவர், லக்குன்னோடு, கவுதம் நந்தா போன்ற படங்களில் நடித்தார்.

நீண்ட பட்டியல்
ஹன்சிகா மோத்வானி 2010 ஆம் ஆண்டு புத்த மதத்திற்கு திரும்பினார். இந்த மதத்தை பின்பற்றும் பிரபலங்களின் நீண்ட பட்டியலில், ஹன்சிகா மோத்வானியும் தனது பெயரைச் சேர்த்துள்ளார்.

தினம் காலையில்..
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரத்யேக நேர்காணலில், நடிகை, "மன அழுத்தத்தை விரட்ட சிறந்த வழி, 'நம் மியோ ஹோ ரெங்கே கியோ' என்று சொல்வதுதான். நான் தினமும் காலையில் அதை சொல்கிறேன். இந்த நடைமுறை என் மனதில் இரக்கத்தை பலப்படுத்துகிறது என்று கூறினார்.

50வது படம்
தமிழ் சினிமாவில் கடைசியாக நடிகை ஹன்சிகா மோத்வானி அதர்வா முரளியுடன் 100 என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மகா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. அது அவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











