அட நம்ம ஹன்சிகாவா இது.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் என்ட்ரி!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி என்ட்ரி கொடுத்துள்ளார்.

சீரியல், சூப்பர் சிங்கர்,டான்ஸ் போட்டி, கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் நிகழ்ச்சி என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதை பார்ப்பதற்கு என்றே தனிகூட்டம் உண்டு.

அதுவும் சமையல் செய்கிறேன் என்ற பெயரில், குக்கும் கோமாளியும் அடிக்கும் லூட்டி தாங்கவே முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 1 ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி, மன அழுத்தத்தை குறைக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக உள்ளது என ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை புகழ்ந்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சுனிதா, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிச சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் கோமாளிகளாக அலப்பறை கொடுத்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள்

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள்

குக்குகளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட், மைம் கோபி என பத்து பேர் குக்குகளாக உள்ளனர். நடந்து முடிந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த குக், இந்த முறை குக்காக அசத்தி வருகிறார்.

கிஷோர் வெளியேறினார்

கிஷோர் வெளியேறினார்

இதில் கடந்த வாரம் நடந்த முதல் எலிமினேஷனில் கிஷோர் வெளியேறினார். அவர் வெளியேறியதை அடுத்து, இணையத்தில், சிவாங்கிக்கு பதிலா என்ன துரத்திட்டாங்க என்றும், குக் வித் கோமாளியை கழுவி ஊற்றி கிஷோர் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், கிஷோர் தான் எந்த சேனலுக்கும் அப்படி பேட்டி கொடுக்கவில்லை அது பொய்யான செய்தி என்று மறுப்பு தெரிவித்தார்.

சர்ப்ரைஸ் கொடுத்த ஹன்சிகா

சர்ப்ரைஸ் கொடுத்த ஹன்சிகா

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை ஹன்சிகா மோத்வானி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். சனிக்கிழமை வெளியாக உள்ள இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X