முழுசா 'காந்தாரி'யா மாறிய ஹன்சிகா.. ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: திருமணத்திற்கு பின் நடிகை ஹன்சிகா மோத்வானி பலத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஹன்சிகா, காந்தாரி படத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

பார்ப்பதற்கே பப்லியாக, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஹன்சிகா முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். இந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்த ஹன்சிகா, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். ரசிகர்களால் குட்டி குஷ்பு என அழைக்கப்பட்ட ஹன்சிகா, இப்படத்தின் வெற்றிக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அமுல் பேபி போல நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பின் பிரபலம் ஆனார்.

Actress Hansika Motwani Gandhari R Kannan

காதல் திருமணம்: தனுஷ்,ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் கோலாகலமாக திருவிழாப்போல நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கைவசம் உள்ள படங்கள்: கடந்த ஆண்டு இவர் நடிப்பில், பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி, கார்டியன் போன்ற படங்கள் வெளியானது. ஆனால், அதில் ஒரு படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், நிச்சயம் அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தற்போது ஹன்சிகாவின் கைவசம், ரௌடி பேபி, மேன், காந்தாரா என்ற தமிழ் படத்திலும், இரண்டு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

காந்தாரி: மேலும் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள காந்தாரி என்கிற திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. இந்த திரைப்படத்தில், மெட்ரோ ஷிரிஷ், மைல் சாமி, ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன் தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், குடிவேலு முருகன், கலைராணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஹன்சிகா மிகவும் வயதான தோற்றம் கலந்த வித்தியாசமான லுக்கில் இருக்கும் ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள், இது ஹன்சிகாவா என கேட்டுள்ளனர். இத்திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X