கொடூரமான பேயாக மாறிய ஹன்சிகா மோத்வானி...கார்டியன் படத்தின் லுக் போஸ்டர்!
சென்னை : ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்டியன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை ஹன்சிகா மோத்வானி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத் துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே பிலிம் ஃபேர் அவார்டு வாங்கிய அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தமிழ் தனுஷ்,சூர்யா, சிம்பு, ஜெயம்ரவி,கார்த்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி
எங்கேயும் எப்போதும் காதல் படத்தில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஹன்சிகாவை பார்த்ததும் மொத்த தமிழ் ரசிகர்களும் அவுட்டாகிவிட்டனர். யாருடா இந்த பொண்ணு சும்மா கும்முனு இருங்காங்களே என்று சின்ன குஷ்பூ என செல்லமாக அழைத்து வருகின்றனர். உதயநிதியுடன் ஒருகல் ஒருகண்ணாடி, தனுஷூடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம், சிம்புவுடன் வால் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

ஹன்சிகாவின் 50வது படம்
இதையடுத்து, ஹன்சிகாவின் 50வது மஹா படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். வால் படத்தின் போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மஹா படத்தில், சிம்பு 40 நிமிடத்திற்கு மேல் வருவார் என கூறப்பட்டதால், சிம்புவின் ரசிகர்கள் முதல் காட்சியை பார்க்க முண்டி அடித்துக்கொண்டு சென்றார்.

ஏமாந்த ரசிகர்கள்
ஆனால், படத்தில் வெறும் 10 நிமிடம் மட்டுமே சிம்பு வந்ததால், கடுப்பான ரசிகர்கள் மஹா படத்தை கழுவி ஊற்றினார்கள். அது மட்டும் இல்லாமல், இதெல்லாம் ஒரு படமா என்று பல நெகடிவ் விமர்சனமும் படத்திற்கு வந்ததால், படம் வந்த சுவடே தெரியாமல் பெட்டிக்குள் சென்றது. நீண்ட நாட்களாக படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தது.

கார்டியன்
இந்நிலையில், ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்டியன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு கார்டியன் என தலைப்பு வைத்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கததில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











