அரைகுறை ஆடை.. கையில் மதுவுடன்.. ஹன்சிகாவின் இன்ஸ்டா அலப்பறை !
மும்பை : ஹன்சிகா ஹாட்டான புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியில் தள்ளியுள்ளார்.
கொழு கொழு தேகத்துடன், வெண்ணையில் உருட்டியெடுத்த பால் கொழுக்கட்டை போல் இருப்பவர் தான் நம்ம சின்ன குஷ்பூ ஹன்சிகா மோத்வானி. இவரது சிரிப்புக்கு குறும்புத்தனமான நடிப்புக்கும் பல ரசிகர்கள் உள்ளனர் .
கொஞ்சி கொஞ்சி பேசும் இவரது பேச்சு அழகுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. ஹன்சிகாவிற்கு அழகே அந்த கொழுக்மொழுக் தான், ஆனால் அவர் இப்போது தனது உடல் எடையயை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பழையபடி
கொஞ்சம் பப்ளியாக மாறுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

இருவரும் இணைந்து
நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் படம் மஹா. இதற்கு முன் இவர்கள் இருவரும் வாலு என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர் என்று அனைவராலும் கூறப்பட்டு கடைசியில் விடை தெரியாமல் முடிந்து போனது அந்த கதை. அத்தகைய குழப்பங்களுக்கு பிறகு பிறகு இவர்கள் இருவரும் சேர்த்து நடிக்கும் படம் இதுவே ஆகும். இதனால் அப்படத்திற்கான எதிர்பார்ப்பும் இருவரது ரசிகர்களிடையேயும் அதிகரித்துள்ளது.

ஹன்சிகாவுக்கு 50வது படம்
ஹன்சிகாவுக்கு இது 50வது படமாகும். இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு இது 25வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் U.R ஜமீல் அவர்கள் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். வித்யாசமான லோகேஷன்ஸ் சென்று சில காட்சிகள் ஷூட்டிங் நடத்தி உள்ளனர் என்பதும் கூடுதல் தகவல்.

கையில் மதுவுடன் ஹன்சிகா
இந்நிலையில் ஹன்சிகா பிகினியில் இருக்கும் ஒரு படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் கையில் மதுவுடன் நீச்சல் உடையில் தண்ணீரில் பாதி உடல் தெரியும்படியும், தண்ணீரில் மூழ்கி இருக்கும் அவரது கால்கள் மட்டும் வாழைத்தண்டு போல அழகாக பளிச் என்று தெரிகிறது. இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பட வாய்ப்புக்காக கவர்ச்சி
அதிகம் கவர்ச்சியை விரும்பாத ஹன்சிகா, இப்போது எல்லாம் அதிகமான கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார் . பிகினி மற்றும் பேண்ட் போடாத படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வப்போது குஷியில் ஆழ்த்தி வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது உண்மை தான் என்பதை இந்த படம் உறுதிப்படுத்தியுள்ளது.
Recommended Video

நம்பிக்கை தரும்
ஒவ்வொரு விடியற்காலையும் நம்பிக்கை தரும் விடியலை கொண்டுவரும். நாளைய பொழுதும் நம்பிக்கை தரும் வெளிச்சத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என படப்பிடிப்பின் மீதான தனது ஏக்கத்தை அந்த படத்தின் கீழே சொல்லியுள்ளார் ஹன்சிகா. கையில் மது கோப்பையுடன் இருக்கும் தனது படத்தை பார்த்து, அவரது ரசிகர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு ஒரு மடக்கு மது கூட கிடைப்பதில்லை, ஆனால் நீங்கள் அதை கையில் ஏந்தி கொண்டுள்ளீர்கள், இதுவும் அழகாத்தான் இருக்கு உங்கள் கையில் இருக்கும் மது கோப்பை என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். இதற்கு ஹன்சிகா பகீர் என சிரித்தும் ஒரு ஹார்ட் சிம்பலும் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











